”மெளனம் பேசியதே படத்துல முதல்ல விஜய்தான்“ - லைலா பகிர்ந்த நினைவலைகள்...!
தீனா படத்துல என்னை கிளாமர் சாங் பண்ண சொல்லி இயக்குநர் கேட்டாரு. நான் ஓகே சொல்லிட்டேன். ஆனால்....
நடிகை லைலா ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் அறிமுகமானார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், கார்த்திக்கின் ‘ரோஜாவனம்’ அஜித்தின் ‘தீனா’ ‘பரமசிவன்’, சூர்யாவுடன் ‘நந்தா’ ‘பிதாமகன்’, ‘உன்னை நினைத்து’, ‘மெளனம் பேசியதே’ விக்ரமின் ‘தில்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
அதேபோல சரண் இயக்கத்தில் வெளியான 'பார்த்தேன் ரசித்தேன்' திரைப்படத்திலும் நடித்தார். அந்த படத்திற்கு இன்றளவும் நல்ல வரவேற்பிருக்கிறது. லைலா நடித்த படங்களுள் ஆண்களின் காதலை அழுத்தமாக சொன்ன திரைப்படம் ’மௌனம் பேசியதே’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் குறைந்த போர்ஷனில் மட்டுமே நடித்து வந்த லைலாவிற்கு இந்த படம் மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது.
இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் , முதன் முதலில் கமிட் செய்யப்பட்டது விஜய்தான். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் விஜய் அந்த படத்திலிருந்து விலகியிருக்கிறார்.இது குறித்தும் தனது மற்ற படங்கள் குறித்தும் லைலா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
அதில் “எனக்கு விஜய் சார் கூட நடிக்க முடியலைனு வருத்தம் இருக்கு. நாங்க இணைந்து ஒரு படம் நடிக்க கமிட்டானோம் . அந்த படத்துல ஃபோட்டோஷூட் மட்டுமல்ல , படத்தின் ஒரு பாட்டும் கூட ஷூட் பண்ணிட்டாங்க. ஆனால் அவர் அந்த படத்தில் இருந்து ஏனோ விலகிட்டாரு. (உன்னை நினைத்து திரைப்படத்தில் சூர்யாவிற்கு முன்பு அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் விஜய் ) .
தீனா படத்துல என்னை கிளாமர் சாங் பண்ண சொல்லி இயக்குநர் கேட்டாரு. நான் ஓகே சொல்லிட்டேன். ஆனால் எனக்கு அது வரல. உடனே இயக்குநர் இவள் க்யூட்டுதான் ! நோ ஹாட்! அப்படினு சொல்லிட்டாரு. நான் எப்போதுமே ஹாப்பியாத்தான் இருப்பேன். எனக்குக் கோவமே வராது. “ என ஷேர் செய்திருக்கிறார் லைலா.