Cinema Headlines August 13: 'கொட்டுக்காளி' டிரைலர் ரிலீஸ்... அபிஷேக் பச்சன் விவாகரத்து... 'தி கோட்' டிரைலர் அப்டேட் - இன்றைய சினிமா செய்திகள்
Cinema Headlines August 23 : வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இன்று 'தி கோட்' படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொட்டுக்காளி டிரைலர் :
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், 'கூழாங்கல்' புகழ் வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் 'கொட்டுக்காளி'. ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.
விவாகரத்து குறித்து அபிஷேக் பச்சன் :
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து பற்றிய தகவல் தான் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் இருக்கிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விவாகரத்து குறித்து கேட்ட போது " நான் இன்னமும் திருமணமானவன் தான். எங்கள் இருவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த மாதிரியான கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லப் போவதும் இல்லை. நீங்கள் தான் இதை ஊதி ஊதி பெரிதாக்குகிறீர்கள். உங்களுக்கு பரபரப்பான செய்தி வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நடிகர்களாக பிரபலங்களாக நாங்கள் இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியதாக இருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
வினோத்ராஜ் - சிவகார்த்திகேயன் :
நடிகர் சூரி நடிப்பில் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்று இப்படத்தை டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசுகையில் வினோத் என்ன கதை வைத்து இருந்தார் என்றெல்லாம் எனக்கு தெரியாது. அவரை கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் கொட்டுக்காளி படத்தை தயாரித்தேன். இந்த படத்தில் லாபம் வந்தால் அதில் ஒரு பங்கை வினோத் ராஜின் அடுத்த படத்திற்கான அட்வான்ஸாக கொடுப்பேன். இதே மாதிரி இன்னும் சிலர் இருந்தால் அவர்களையும் கண்டுபிடித்து ஆதரிப்பேன் என பேசி இருந்தார்.
'தி கோட்' டிரைலர் அப்டேட் :
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. பிரஷாந்த், பிரபு தேவா, ஜெயராம், மோகன், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளர். உலகெங்கிலும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் 'தி கோட்' படத்தின் டிரைலர் ரிலீசுக்காக மக்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இன்று இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து போஸ்ட் மூலம் அப்டேட் கொடுத்து இருந்தார். அந்த வகையில் இன்று தி கோட் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.