சிறிய மார்பகத்தால் கிண்டல்.. என்ன தவறு செய்தேன்? கலங்கிய அனன்யா பாண்டே! நேர்காணலில் ஓபன் டாக்!
நீங்கள் தொடர்ந்து என்னைப்பற்றி நான் அழகாக இல்லை, என் மார்பகங்கள் ஃபிளாட்டாக இருக்கின்றன என்று குற்றங்களை சொல்லும்போது 19 வயது பெண்ணாக எனக்கு சிறிய பயம் ஏற்படுகிறது
பிரபல பாலிவுட் நடிகரான சங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே 2019ஆம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் அனன்யா பாண்டே தனக்கு ட்ரோலிங்கை பார்த்தால் சற்று பயமாக இருப்பதாக காபி வித் கரண் நிகழ்ச்சியில் கூறி உள்ளார்.
லிகர் திரைப்படம்
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் லிகர் படத்தில் நடித்துவரும் அவர், மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையில் வெளிவர உள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டே. அது தொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன.
நெபாட்டிசம்
இந்நிலையில் நடிகை அனன்யா பாண்டே பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் இந்த வாரம் பங்கேற்றார். அதில் பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட அவர் நெபாட்டிசம் என தனது தந்தை சங்கி பாண்டேவின் மகள் என்பதால் செய்யப்படும் ட்ரோல்கள் குறித்து வருத்தம் தெரிவித்திருந்தார்.
ட்ரோலிங் குறித்து
அனன்யா மீது தாக்கப்படும் ட்ரோலிங் குறித்து கரண் கேட்டபோது, அது தன்னை மிகவும் பாதிக்கிறது என்று பாண்டே ஒப்புக்கொண்டார், குறிப்பாக மக்கள் தனது குடும்ப உறுப்பினர்களை விவாதத்திற்குள் கொண்டு வரும்போது, கடுமையாக பாதிப்பதாக அவர் கூறினார். அவர் பேசுகையில்,"இங்கே உட்கார்ந்து கொண்டு நான் மகிழ்ச்சியாக இருப்பதாகவோ அல்லது நான் மிகவும் வலிமையாக இருப்பதாகவோ காட்டிக் கொள்ள முடியாது", என்று கூறினார்.
பயமாக இருக்கிறது
மேலும் பேசிய அவர், "நீங்கள் தொடர்ந்து என்னைப்பற்றி நான் அழகாக இல்லை, என் மார்பகங்கள் ஃபிளாட்டாக இருக்கின்றன என்று குற்றங்களை சொல்லும்போது 19 வயது பெண்ணாக எனக்கு சிறிய பயம் ஏற்படுகிறது. மேலும் நீங்கள் என் பெற்றோரை அல்லது என் சகோதரியை அவமானப்படுத்தினால், அது மேலும் பயமாக இருக்கிறது, பல நேரங்களில் வருத்தமாக இருக்கிறது", எனக் கூறினார்.
நான் என்ன தவறு செய்தேன்
"நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு புரியவில்லை. நான் கனிவான, நல்ல மனிதராக இருக்க முயற்சிக்கிறேன், நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன், என் வேலையில் நான் மிகவும் நேர்மையாக இருக்கிறேன். எனக்கு நடிப்பு பிடிக்கும். எனக்கு நினைவிருக்கும் வரை, நான் ஒரு நடிகராக இருக்க விரும்புகிறேன். இவர்கள் என்னை காயப்படுத்த, புண்படுத்த நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை." என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்