Veeram Hindi Remake: லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்.. 'வீரம்' ரீமேக்கான சல்மான்கான் படத்தின் முதல் பாடல் நாளை ரிலீஸ்..!
காதலர் தினத்தை முன்னிட்டு வீரம் படத்தின் இந்தி ரீமேக்காக சல்மான்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படத்தின் முதல் பாடல் நாளை ரிலீசாகிறது.
இந்தி திரையுலகில் ஷாரூக்கானுக்கு இணையான நடிகர் சல்மான்கான். தமிழில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வீரம். இந்த படத்தை தற்போது இந்தியில் சல்மான்கான் நடிப்பில் ரீமேக் செய்து வருகின்றனர்.
கிஸ்கா பாய் கிஸ்கி ஜான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் சல்மான்கானுடன் ஏராளமான நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்தி திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான பர்ஹத் சம்ஜி இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், சல்மான்கான் ரசிகர்களுக்கு காதலர் தின விருந்தாக இந்த படத்தில் இருந்து சூப்பர் மெலோடி பாடல் நாளை ரிலீசாக உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள நையோ லக்டா என்ற பாடல் ரீலீசாக உள்ளது. இதை படத்தின் இயக்குனர் பர்ஹத் சம்ஜி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#NaiyoLagda teaser....
— Farhad Samji (@farhad_samji) February 11, 2023
Naiyo Lagda song on 12th Feb....@BeingSalmanKhan @ZeeStudios_ @ZeeMusicCompany pic.twitter.com/YRh4CCxPlK
சல்மான்கானுடன் இந்த படத்தில் தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய பிரபலங்களான வெங்கடேஷ், ஜெகபதிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கே.ஜி.எஃப். படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். மணிகண்டன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ராம்சரண் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சல்மான்கான் நாயகனாக நடித்து கடைசியாக ஆன்டிம் என்ற படம் 2021ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து, அவர் டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்பாதர் படத்தில் மசூம்பாய் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்தார்.
இதையடுத்து, வேத் என்ற மராத்தி படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடனமாடினார். சமீபத்தில் மாஸ் ஹிட்டடித்த பதான் படத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து ஒரு சண்டைக் காட்சியில் நடித்தார். அவர் நாயகனாக நடித்துள்ள கிஸி கா பாய் கிஸி கா ஜான் படமும், டைகர் 3 என்ற படமும் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. வீரம் படம் தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்றும், கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் ஒடியா என்ற பெயரிலும் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக இந்தியில் வெற்றிப்படத்தை அளிக்காத சல்மான்கான் குடும்பப்படமாக உருவாகியுள்ள இந்த படம் தனக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று முழு நம்பிக்கையுடன் உள்ளார்.
மேலும் படிக்க: 100 days of Love Today : 100 நாட்களை எட்டியது லவ் டுடே... மொத்த வசூல் இத்தனை கோடியா? மீண்டும் ஸ்கெட்ச் போடும் கூட்டணி
மேலும் படிக்க: Suriya 42: சூர்யாவுடன் நடிக்க ஆசையா..? ஆடிசனுக்கு அழைப்பு விடுத்த படக்குழு..! உடனே படிங்க..