100 days of Love Today : 100 நாட்களை எட்டியது லவ் டுடே... மொத்த வசூல் இத்தனை கோடியா? மீண்டும் ஸ்கெட்ச் போடும் கூட்டணி
வெற்றிகரமாக 100வது நாளை எட்டியுள்ள 'லவ் டுடே' கூட்டணி மீண்டும் மற்றுமொரு திரைப்படத்தில் இணைய உள்ளனர். இது குறித்த ஆதிகார்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
பெரும் பட்ஜெட் படங்களின் மத்தியில் கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சர்ப்ரைஸ் ஹிட்டாக அமைந்த படம் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த 'லவ் டுடே' திரைப்படம்.
100வது நாளாக லவ் டுடே:
நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியதோடு பாஸிட்டிவ் விமர்சனங்களால் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. பிரதீப் ரங்கநாதன், இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் இன்றுடன் 100வது நாளை வெற்றிகரமாக எட்டியுள்ளது. 9 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட இப்படம் 100வது நாளான இன்றுடன் 80 கோடியை பாக்ஸ் ஆபிசில் வசூலித்து சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோ ஹீரோயின் இருவரும் ஒருவருக்கொருவர் செல் போன்களை ஒருவருக்கொருவர் மாற்றி கொள்வதும் அதனால் ஏற்படும் சிக்கலும் பிரச்சனையும் தான் படத்தின் திரைக்கதை.
#LoveToday hits 100*
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 11, 2023
Same team will be back with another project. Announcement soon. pic.twitter.com/pQQTFnyjbU
வாய்ப்புகளின் குவியல் :
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் அவர்களின் சொந்த திரையரங்குகளில் 100 நாட்களை எட்டியுள்ளது என்பதை காட்டிலும் மற்ற திரையரங்குகளிலும் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிலவும் எதார்த்தமான சூழலை திரைக்கதையாக கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு தற்போது வாய்ப்புகள் மலைபோல குவிந்து வருகிறது. நடிகர் சிம்பு நடித்து வந்த 'கொரோனா குமார்' படத்தில் இருந்து சிம்பு விலகியதால் அப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#LoveToday completes 100 days of theatrical run A huge victory only possible because of all the love we got from all of you ❤️ Thank u for standing with us, rooting for us and making this film a cult classic #100daysLoveToday @pradeeponelife @i__ivana_ @thisisysr @aishkalpathi
— Archana Kalpathi (@archanakalpathi) February 11, 2023
மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி :
மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் லவ் டுடே படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை 100 வது நாளான இன்று வெளியிட்டுள்ளது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் அடுத்த ப்ராஜெக்டில் இணையவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த தகவல் ரசிகர்களை சந்தோஷத்தில் துள்ளி குதிக்க செய்துள்ளது.