![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Will Smith : அந்த நிகழ்வுக்கு பிறகு...! இப்போது எப்படி இருக்கிறார் வில் ஸ்மித்..? மனம் திறக்கும் கெவின் ஹார்ட்.!
ஒரே ஒரு அறை, அந்த சத்தம் உலகம் முழுவதும் ஒலித்தது. ஆம் ஆஸ்கர் விழா மேடையில் வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர ஒலித்தது.
![Will Smith : அந்த நிகழ்வுக்கு பிறகு...! இப்போது எப்படி இருக்கிறார் வில் ஸ்மித்..? மனம் திறக்கும் கெவின் ஹார்ட்.! Kevin Hart addresses how Will Smith is doing after the actor's infamous Chris Rock Oscars slap controversy Will Smith : அந்த நிகழ்வுக்கு பிறகு...! இப்போது எப்படி இருக்கிறார் வில் ஸ்மித்..? மனம் திறக்கும் கெவின் ஹார்ட்.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/e51e4812c7f80d606ad4adca2937f1781657807201_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்த சம்பவம் நடந்து மாதங்கள் ஓடிவிட்ட நிலையில், அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்று மனம் திறந்திருக்கிறார் கெவின் ஹார்ட்.
டிசி லீக் ஆஃப் சூப்பர் பெட்ஸ் படத்தின் முன்னோட்டத்தின் போது கெவின் ஹார்ட் ஒரு பேட்டியளித்தார். அப்போது அவர், வில் ஸ்மித் அந்த நிகழ்வுக்காக வருந்துகிறார். மன்னிப்பு கோரியுள்ளார். அந்த சம்பவத்திற்குப் பின்னர் அவரிடம் மாற்றம் தெரிகிறது. மனிதர்கள் சில நேரங்களில் தவறு செய்வது இயல்பே. ஆனால் ஒரு நபர் ஒருமுறை செய்த தவறைக் கொண்டு அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நிர்ணயிப்பது சரியானது அல்ல. நடந்ததைப் பற்றிப் பேசாமல் நிகழ்காலத்தை கருத்தில் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். அவர்கள் இருவருமே எல்லாவற்றையும் மறந்து கடந்து ஆறுதல் வட்டத்திற்குள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். மக்கள் எப்போதும் அவர்களின் சிறப்பான குணாதிசயங்களை வெளிப்படுத்தி மகிழ்வாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நான் கிறிஸ்ஸையும் நேசிக்கிறேன். விஸ் ஸ்மித்தையும் நேசிக்கிறேன். வாழ்க்கைப் பயணம் தொடரட்டும். அவரவர் வாழ்க்கையில் வளர்வார்கள். அவர்கள் தவறுகளை உணரவும், திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு தர வேண்டும் தானே என்றார்.
நடந்தது என்ன?
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தனது மனைவி ஜடா பிங்கெட் (Jada Pinkett) பற்றி உருவக்கேலி செய்ததற்காக ஆஸ்கர் விருது நிகழ்வில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை (Chris Rock) டிகர் வில் ஸ்மித் (Will Smith), கன்னத்தில் அறைந்தார். காமெடி நடிகர் கிறிஸ் ராக்ஸ் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து, academy of motion picture arats and science அமைப்பின் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆலோபீசியா நோய்:
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்க்கெட்டின் தலையில் முடி இல்லாதது பற்றியே க்றிஸ் ராக் பேசியிருந்தார். ஆலோபீசியா (alopecia) என்னும் நோயினால் அவதிப்பட்டு வருகிறார் ஜடா பிங்க்கெட் ஸ்மித். இதனால் அவர் தலையில் உள்ள முடி கொட்டத் தொடங்கியது. இதுகுறித்துப் பொதுவெளியில் முதல்முறையாக 2018-ம் ஆண்டு அறிவித்தார் ஜடா ஸ்மித். இதைத் தொடர்ந்து முடியை முழுவதுமாக மழித்து, மொட்டையும் அடித்துக்கொண்டார்.
அமெரிக்க சுகாதாரத்துறை அறிக்கைப்படி, ஆலோபீசியா என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி முடி கொட்டுதலை ஏற்படுத்தும் குறைபாடு ஆகும். இந்த நிலையால், பாதிக்கப்பட்டவரின் தலைமுடி, கண் புருவ முடி மற்றும் இமையில் உள்ள முடி முழுவதுமாகக் கொட்டிவிடும்.
ஆரம்பத்தில் முடி கொட்டுதல் சிறிய அளவில், வட்ட வடிவிலான திட்டுகளாகத் தொடங்கும். பின்பு மெல்ல அதிகரிக்கும். சிலருக்குக் கடுமையாக முடி கொட்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர். முடி இழப்பைத் தவிர வேறு அறிகுறிகள் எதுவும் அவர்களுக்கு இருப்பதில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)