மேலும் அறிய

Keerthy Suresh: துபாய் தொழிலதிபருடன் காதலா? காதலன் பற்றி மனம் திறந்த கீர்த்திசுரேஷ்..!

Keerthy Suresh:முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தன் காதல், திருமணம் பற்றிய வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.

முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தன் காதல், திருமணம் பற்றிய வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஃபர்ஹான் பின் லியாகத் என்பவரை காதலித்து வருவதாகவும், இருவரும் டேட் செய்வதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகின.

Keerthy Suresh: துபாய் தொழிலதிபருடன் காதலா? காதலன் பற்றி மனம் திறந்த கீர்த்திசுரேஷ்..!

இதற்கு பதிலளித்துள்ள கீர்த்தி சுரேஷ், “ அவர் என்னுடைய நண்பர். நேரம் வரும்போது என் காதல் (மிஸ்ட்ரி மேன்) பற்றிய தகவல்களை பகிர்வேன்.” என்று டிவீட் செய்துள்ளார்.

சமீபத்தில், கீர்த்தி சுரேஷ், ஃபர்ஹான் பின் லியாகத் என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தனது பால்யகால நண்பரான ஃபர்ஹானை நீண்ட நாட்களாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும்,  விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவிட்டு வந்தனர்.

கீர்த்தி சுரேஷ் அடுத்த புராஜெக்ட்:

இறுதியாக நடிகர் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த தசரா படம் 100 கோடிகளுக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை படைத்தது. அப்படத்தின் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மைனரு வேட்டி கட்டி’ பாடல் வரவேற்பைப் பெற்று இன்ஸ்டா ரீல்களை ஆக்கிரமித்தன. ஆனாலும் வெண்ணிலா கதாபாத்திரத்தில் கீர்த்தி பொருந்தவில்லை என்றும் ட்ரோல்கள் கிளம்பின.

அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழில் நடித்துள்ள மாமன்னன் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தமிழில் தான் கீர்த்தி பெருமளவு கவனம் செலுத்தி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். முன்னதாக மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்தது. வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் இந்தப் போஸ்டரில் இடம்பெற்றிருந்தனர். 

நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், ஏற்கெனவே இதுதான் சினிமாவில் தன் கடைசி படம் என அறிவித்துவிட்டார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மாறுபட்ட கதாபாத்திரங்கள்:

மாறுபட்ட கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் செல்வராகவுடன் இணைந்து 'சாணி காயிதம்' திரைப்படத்தில் நடித்ததற்காக பாராட்டுகளை குவித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக 'மாமன்னன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள். 

செட் ஆகல கீர்த்தி :

சமீபத்தில் நடிகர் நானி ஜோடியாக வெளியான 'தசரா' திரைப்படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்தது. கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் படத்தோடு ஒன்றவில்லை என கருத்து தெரிவித்து இருந்தனர் அவரின் ரசிகர்கள். 

இந்நிலையில், தன்னை பற்றிய வதந்திகளுக்கு கீர்த்தி சுரேஷ் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்
Embed widget