கவின் நயன்தாரா நடித்துள்ள 'ஹாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Hi Movie First Look. : விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ஹாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

வளர்ந்து வரும் நடிகர் கவின் அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். மறுபக்கம் நயன்தாரா நடிப்பிலும் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் கவின் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்துள்ள ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ஹாய் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாயிடப்பட்டுள்ளது.
ஹாய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரித்து கவின் மற்றும் நயன்தாரா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'ஹாய்'. ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் , லியோ ஆகிய படங்களில் ஹிட் பாடல்களை எழுதி கவனமீர்த்தவர் விஷ்ணு எடவன்.
HI :)
— Seven Screen Studio (@7screenstudio) October 8, 2025
A word, a spark, a story.
The first look of #HiMovie is here !!
starring #Nayanthara & @Kavin_m_0431 @VishnuEdavan1 @JenMartinmusic @zeestudiossouth @Rowdy_Pictures @7screenstudio #UmeshKrBansal @girishjohar #RaveenaDeshpaande @kejriwalakshay @TheVinothCj… pic.twitter.com/7nOdB0gSjE
கவின் நடிப்பில் உருவாகும் படங்கள்
கவின் நடிப்பில் அண்மையில் கிஸ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்தில் கவின் நடித்து வருகிறார். ஆண்ட்ரியா இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
நயன்தாரா நடிக்கும் படங்கள்
மறுபக்கம் நயன்தாரா சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மலையாளத்தில் நிவின் பாலியுடன் டியர் ஸ்டுடண்ட்ஸ் , மம்மூட்டி மோகன்லால் நடிக்கும் பேட்ரியட் , யாஷ் நடிக்கும் டாக்ஸிக் ஆகிய மிகப்பெரிய ஸ்டார்களின் படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார்.





















