Kousalya: காதல் தோல்வியை தாண்டி; 46 வயசு வரைக்கும் முரட்டு சிங்கிளா இருக்க காரணம் இது தான்! ஷாக்கான ரசிகர்கள்!
90ஸ் ஹிட்ஸ்களின் கனவு கன்னியான கௌசல்யா கல்யாணம் பண்ணிக்காம இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து, அவரே ஓபனாக பேசியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை கௌசல்யா. இவருடைய உண்மையான பெயர் கவிதா. தமிழ் சினிமாவில் முரளி நடித்த 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற படம் மூலமாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் கௌசல்யா. அதனால் இதே பெயரில் வைத்து கொண்டார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து நேருக்கு நேர், ஜாலி, பிரியமுடன், சொல்லாமலே என்று ஏராளமான படங்களில் நடித்தார். தமிழ் சினிமா அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. ரசிகர்களும் அவரை கொண்டாட தொடங்கினர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் பிஸியான நடிகையாகவே கௌசல்யா அறியப்பட்டார். அதோடு மட்டுமின்றி 90ஸ் ஹிட்ஸ்களின் கனவு நாயகியாகவும் வலம் வந்தார். சினிமாவிலும் மட்டுமின்றி சின்னத்திரையிலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாகவே திகழ்ந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்று, இப்போது டிரெண்டாகி வருகிறது. சினிமாவில் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகைகளில் கௌசல்யாவும் ஒருவர். இவர் இப்போது 46 வயதை நெருங்கிவிட்டார். எனினும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார்.
இது குறித்து கௌசல்யா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது... "திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சரியானவரை நான் இன்னும் சந்திக்கவில்லை. ஒருவர் என்னுடைய வாழ்வில் வந்தார். ஆனால், அந்த உறவும் பாதியோடு முடிந்துவிட்டது. நான் எதிர்பார்க்கும் அளவிற்கு ஒருவரை பார்த்திருந்தால் திருமணம் செய்து கொண்டிருப்பேன். ஆனால் அப்படி ஒருவரை சந்திக்கவில்லை.
நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு என்னுடைய பெற்றோரும் ஒரு காரணம். அவர்களை தனியாக விட்டு விட்டு என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. சினிமாவில் பிஸியாக இருந்த போது எனக்கு ஏற்பட்ட நரம்பு தொடர்பான நோய்க்கு மருந்து சாப்பிடவே என்னுடைய உடல் எடை கூடியது. இதனால், சினிமா வாய்ப்பும் குறைந்தது. இப்போது குடும்பம், குழந்தை போன்ற போன்ற குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியா என்பது எனக்கு தெரியவில்லை. நான் கல்யாணம் பண்ணிக்காம இருக்க இதுவும் கூட ஒரு காரணம் என்று கூறியிருக்கிறார்.

