Sardar box office collections: ஒதுங்கிய பிரின்ஸ்.. அடித்து ஏறும் ‘சர்தார்’ - படத்தின் தற்போதைய வசூல் என்ன? - முழு விபரம்!
கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார்’ படத்தின் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார்’ படத்தின் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா காலங்களுக்கு முன்பே கார்த்தியின் ‘சர்தார்’ பணிகள் தொடங்கி விட்டன. நல்ல நடிப்புக்கு பெயர் போன நடிகர் கார்த்தி, இப்படத்தில் பல கெட்-அப்புகளில் நடித்துள்ளதாலும், பல்வேறு லொக்கேஷன்களில் படம் படம்பிடிக்க பட்டதாலும், மக்களின் மத்தியில் இப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி இருந்தார். ரசிகர்களின் பல நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு இப்படம் தீபாவளி பரிசாக கடந்த 21 ஆம் தேதி வெளியானது.
View this post on Instagram
சர்தார் படத்தின் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், கலவையான விமர்சனங்களை முன்வைத்தனர். இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, மக்கள் மீது படம் குறித்தான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. அத்துடன் இந்தப்படத்துடன் வெளியிடப்பட்ட பிரின்ஸ் படமும் மக்களிடம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்றதால், அடுத்தடுத்த காட்சிகளில் திரையிடப்பட்ட சர்தார் திரைப்படத்திற்கு வரும் மக்களின் கூட்டம் அதிகமானது. இந்த நிலையில் சர்தார் படத்தின் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. தீபாவளிக்கு பிறகு முதல் வேலை நாளான நேற்றைய தினம் படமானது தோராயமாக 4.75 கோடி வசூல் செய்துள்ளதாம். படத்தின் மொத்த வசூல் கிட்டத்தட்ட 45 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்திய அளவில் ‘சர்தார்’ திரைப்படம் வசூலித்த வசூல் விபரம்
வெள்ளிக்கிழமை - 6 கோடி
சனிக்கிழமை -7 கோடி
ஞாயிறு - 8 கோடி
திங்கள் - 10.25 கோடி
செவ்வாய் -8.50 கோடி
புதன்கிழமை - 4.75 கோடி
முன்னதாக கார்த்தி நடிப்பில், தீபாவளி பண்டிகையன்று ‘கைதி’ படம் வெளியானது. வெளியான அன்றைய தினம் கைதி 2.40 கோடி வசூல் செய்த அந்த திரைப்படம், தமிழகத்தில் 50 கோடி வரை வசூல் செய்திருந்தது. ‘சர்தார்’ திரைப்படம் தற்போது வரை தோராயமாக, தமிழகத்தில் 30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. வார முடிவில் 33 கோடி வரை படம் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் படமானது 60 கோடி வரை வசூலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு - 29.75 கோடி
ஆந்திரா/தெலங்கானா -10.50 கோடி
கர்நாடகா - 2.75கோடி
கேரளா - 1.10 கோடி
வட இந்தியா - 40 லட்சம்
அதே நேரம் இந்தப்படத்துடன் வெளியிடப்பட்ட ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் வெறும் 22 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.