Kantara: கர்நாடகா அரசை உலுக்கிய ‘காந்தாரா’ படம்...தெய்வ நர்த்தகர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் "காந்தாரா".
கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம் அம்மாநில அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியாகி திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
Have a blockbuster #Diwali and catch this record breaking movie now in theatres near you 🔥#Kantara @shetty_rishab @hombalefilms pic.twitter.com/nwmB5bSfMN
— BookMyShow (@bookmyshow) October 22, 2022
அதன் தாக்கம் பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்க அதீத ஆர்வம் கொண்டிந்தனர். அதற்கேற்றாற்போல் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
View this post on Instagram
இப்படத்தை நடிகர்கள் கார்த்தி, தனுஷ், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். மேலும் உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் படத்தில் அலங்காரங்கள் செய்து சாமி ஆடும் தெய்வ நர்த்தகர்கள் படும் கஷ்டங்களையும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசால் கிராமப்புற பூசாரிகளுக்கு உதவித்தொகை வழங்குவது போல கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இது காந்தாரா படத்திற்கு கிடைத்த வெற்றி என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டை தெரிவித்துள்ளனர்.