திரையரங்குகளில் கர்ணன் - கொரோனா அச்சத்தால் முன்பதிவில் மந்தநிலை?
கர்ணன் திரைப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள், கொரோனா அச்சத்தால் சற்று மந்தமாகவே உள்ளது என்று கூறப்படுகிறது
கர்ணன் திரைப்படம் இன்று திரையங்குகளில் வெளியாகி தனுஷ் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் சென்னை ரோகிணி திரையரங்கில் முதல் காட்சிக்கு ரசிகர்களோடு இணைந்து கர்ணன் திரைப்படத்தை பார்த்தனர்.

Makers of #Karnan celebrating the movie with fans at #FansFortRohini @mari_selvaraj @theVcreations @Music_Santhosh @dhanushkraja pic.twitter.com/60Bm2UxKMd
— Rohini SilverScreens (@RohiniSilverScr) April 9, 2021

நாளை முதல் திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளோடு மட்டுமே இயங்கவுள்ள நிலையில் கர்ணன் திரைப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் கொரோனா அச்சத்தால் சற்று மந்தமாகவே உள்ளது என்று கூறப்படுகிறது. பல திரையரங்குகளில் 3 முதல் 8 காட்சிகள் வரை திரையிடப்படும் நிலையில் இன்னும்
முக்கிய திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இணையவழியில் படம் வெளியாகாமல் திரையரங்குகளில் கர்ணன் படம் வெளியானது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.