மேலும் அறிய
Advertisement
Kamal Haasan: கௌதமியை முதலில் இப்படிதான் நினைத்தேன்; ஆனால்... - வைரலாகும் கமல் வீடியோ
Kamal Haasan: “காதலில் வெவ்வேறு வடிவங்கள் உண்டு. கௌதமி எனக்கு துணைவியாக வருவார் என்று நான் நினைத்ததில்லை” - கமல்ஹாசன்
Kamal Haasan: முதன் முதலில் கௌதமியை பார்க்கும்போது அவர் கிளாமர் பெண் என்று நினைத்ததாக கமல்ஹாசன் பேசிய வீடியோ இன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த கமல்ஹாசன், தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயின்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், அதற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையாமல் இருந்தனர். இந்த நிலையில் 30 ஆண்டுகள் கழித்து Thug Life படத்தின் மூலம் கமல் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளனர்.
நடிப்பு மட்டும் இல்லாமல் பாடல் பாடுவது, நடனம், இயக்கம், தயாரிப்பு பாடல் எழுதுவது என அனைத்து வித்தைகளையும் தன்னுள் வைத்த கமல்ஹாசனை சினிமாவின் பல்கலைக்கழகம் என்று அழைக்கிறார்கள். தொடர்ந்து, சினிமாவில் தீவிரம் காட்டி வரும் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அதை வழிநடத்தி வருகிறார். சில ஆண்டுகள் நடிப்பிற்கு பிரேக் கொடுத்த கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் இந்தியன்2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
சினிமா வாழ்க்கையில் கமல்ஹாசன் ஜாம்பவனாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர். தனது இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்த கமல்ஹாசன், நடிகை கௌதமியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இதனால் கமல்ஹாசன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனை பிரிவதாக கௌதமி அறிவித்தார்.
இந்த நிலையில் நடிகை கௌதமி குறித்து, கமல்ஹாசன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “காதலில் வெவ்வேறு வடிவங்கள் உண்டு. கௌதமி எனக்கு துணைவியாக வருவார் என்று நான் நினைத்ததில்லை. முதலில் அவரை பார்க்கும்போது கிளாமர் பெண் என்று தான் நினைத்தேன். அவருடன் பழகும்போது தான், அவரது சிந்தனை வடிவம் என்னை கவர்ந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அதன்பின்னர், அவர் எனக்கு நட்பாகவும், உறவாகவும் மாறிவிட்டார்” என்றார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion