Kamal Haasan Birthday: இளம் நடிகை உடன் நடனம்... ஆட்டம்... கொண்டாட்டத்துடன் கமல் பிறந்தநாள் பார்ட்டி!
Kamal Haasan Birthday : நேற்று இரவு நடந்த பிறந்தநாள் பார்ட்டியில், பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆடி பாடி மகிழ்ந்துள்ளனர்.
நடிகர் கமலஹாசனின் 68 பிறந்தநாள் நேற்று இரவு கோலகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. நவம்பர் 7 ஆம் தேதி பிறந்தநாள் காணும் உலக நாயகன் கமலுக்கு, இன்றோடு 68 வயதாகிறது. இவரின் பிறந்தநாளையொட்டி பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
திரை பிரபலங்கள் பலர், ஒன்று சேர்ந்து சென்னையில் உள்ள கிரின் பார்க் ஓட்டலில் பிறந்தநாள் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். இதில், கமலஹாசனும் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டிக்கு வந்த நடிகை பிந்து மாதவியுடன் நடனம் ஆடும் காட்சி போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.
In this world of glitz and glamour, where there are men all around…. You Sir are a true Gentleman. Happy bday Kamal sir @ikamalhaasan💫🧚🏼
— Bindu Madhavi (@thebindumadhavi) November 7, 2022
*you know how to make a lady feel special❤️🤗 pic.twitter.com/M6fyLBnCPm
அந்த போட்டோவை பிந்து மாதவி ட்விட்டரில் ஷேர் செய்து , "மினுமினுப்பும் கவர்ச்சியும் நிறைந்த இந்த உலகை சுற்றி பல ஆண்கள் உள்ளனர். சார், நீங்கள் ஒரு உண்மையான ஜென்டில்மேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார் ஒரு பெண்ணை எப்படி ஸ்பெஷலாக உணர வைப்பது என்பது உங்களுக்குத் தெரியும்,” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
“நீங்க படிக்க நான் சில புத்தகம் தருவதிலிருந்தே நீங்க புரிஞ்சிக்கலாம்,நான் இன்னும் உங்களை முழுசா படிச்சி முடிக்கலன்னு!”சொல்லிக் கொடுத்தேன்.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 7, 2022
அள்ளிக்கொடுத்தார் அன்பை! pic.twitter.com/s09sAdp1Mf
இந்த பார்ட்டியில், பார்த்திபன், எஸ்.ஜே. சூர்யா, தேவி ஸ்ரீ பிரசாத், சித்தார்த், விஷ்ணு விஷால் ஆகிய பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவரும், கமலுடன் போட்டோ எடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்களை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
நேற்று, அவரின் பிறந்தநாளையொட்டி புதிய அறிவிப்பு ஒன்றை கமல் வெளியிட்டார். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகளுக்கு பிறகு கமலஹாசன் மணிரத்னத்துடன் இணைந்து தனது 234-வது படத்தை கமல் நடிக்கவுள்ளார். இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
சில ஆண்டுகளாக, நடிப்பில் கவனம் செலுத்தாத கமல், லோகேஷ் கனகராஜின், “விக்ரம்” படத்தில் சூப்பர் கம்-பேக் கொடுத்தார். அதை தொடர்ந்து, இயக்குநர் ஹெச்.வினோத்துடனும் கைக்கோர்க்கவுள்ளார் கமல்.