மேலும் அறிய

Surya | ''சிலர் பேசவே மாட்டார்கள்..விஜய் ஆடியோ லாஞ்சில் பேசி சம்பளத்தை ஏற்றுவார்'' - கொதித்த பிஸ்மி!

ஜெய் பீம் திரைப்படத்தை சுற்றியுள்ள சர்ச்சைகள் ஓயவில்லை. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

சூர்யா விவகாரத்தில் சினிமாத்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது என பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான பிஸ்மி தெரிவித்துள்ளார்.

ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.

இதற்கிடையே படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.  எனினும், ஜெய் பீம் திரைப்படத்தை சுற்றியுள்ள சர்ச்சைகள் ஓயவில்லை. தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Surya | ''சிலர் பேசவே மாட்டார்கள்..விஜய் ஆடியோ லாஞ்சில் பேசி சம்பளத்தை ஏற்றுவார்'' - கொதித்த பிஸ்மி!

இந்நிலையில், "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியது. இதன்காரணமாக, நடிகர் சூர்யாவை சப்போர்ட் செய்வதாக அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா விவகாரம் குறித்து த்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான பிஸ்மி ஏபிபி நாடுக்கு பிரத்யேக நேர்காணலில் பேசினார். அதில் இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்தவேண்டிய கட்சி பாஜக என்றும், தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய கட்சி பாமக என்றும் பேசினார். மேலும் சூர்யா விவகாரத்தில் சினிமாத்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

சமூகப்பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் சூர்யாவின் பாதை சரியானதா என்ற கேள்விக்கு பதிலளித்த பிஸ்மி, ''எல்லா நடிகர்களுக்கும் அரசியல் பார்வை இருக்கணும்.  சமூகத்துக்கு எதாவது ஒரு பிரச்னை என்றால் குரல் கொடுக்க வேண்டும். இது ஒரு அடிப்படை பண்பு. ஆனால் இந்தப்பண்பில்லாத நடிகர்கள் இங்கு நிறையப் பேர் உண்டு. பல பேர் கண் முன்னே அநீதி நடந்தாலும் வாயை திறப்பதில்லை. ஐடி ரெய்டு வரும் என பயப்படுகிறார்கள். குறிப்பாக விஜய் மாதிரியான ஹீரோக்கள் ஆடியோ லாஞ்சில் பேசி அதனை பேசுபொருளாக்கி அந்தப்படத்தை ஓட வைக்கிறார்கள். அதன் மூலம் சம்பளத்தை மேலும் ரூ.2 கோடி அதிகரித்துக்கொள்கிறார்கள். அந்த வகையில்  சமூகப்பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் சூர்யா பாராட்டுக்குரியவர்'' என்றார்.

முழு நேர்காணல்:

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget