மேலும் அறிய

Karthik Subbaraj : நிமிஷா சஜயன் அழகா இல்லையா? பத்திரிகையாளரிடம் சீறிய கார்த்திக் சுப்பராஜ்

ஜிகர்தண்டா படத்தின் நடிகை நிமிஷா சஜயன் குறித்து பத்திரிகையாளரின் கருத்திற்கு செமத்தியாக குடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா, ஷைனி டாம் சாக்கோ உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் ஸ்டைலில் ஒரு நல்ல கமர்ஷியல் படமாக மட்டும் இல்லாமல் சமூக பிரச்னையை பேசும் படமாகவும் உருவாகி இருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். 4 ஆண்டுகள் கழித்து திரையரங்கத்தில் தன்னுடைய படத்தை வெளியிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ், தன் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படத்தை வழங்கியிருக்கிறார்.

தமிழில் கலக்கும் நிமிஷா சஜயன்

சமீப காலங்களில் மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த மிகத் திறமையான நடிகைகளில் ஒரு நிமிஷா சஜயன். மலையாளத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன், மாலிக் உள்ளிட்டப் படங்களில் நடித்த நிமிஷா சஜயன் சமீபத்தில் சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அவரது நடிப்பு மக்களால் பாராட்டப்படுகிறது. இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்

அவர் அழகா இல்லை

ஜிகர்தண்டா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்கத்திற்குச்  சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறார்கள் படக்குழுவினர். சமீபத்தில் பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தபோது  ஒருவர் கார்த்திக் சுப்பராஜிடம்.  சித்தா மற்றும் ஜிகர்தண்டா படத்தில் நடித்த நிமிஷா சஜயன் அழகாக இல்லை என்றாலும் சிறப்பாக நடிக்கிறார் என்று கூறியிருந்தார். இதனை மறுத்து பேசிய கார்த்திக் சுப்பராஜ்  “அவங்க அழகா இல்லைனு நீங்க எப்டி சொல்றீங்க. உங்களுடைய பார்வையில் பிரச்சனை இருக்கிறது. யாரும் யாரையும் நீங்கள் அழகாக இல்லை என்று சொல்லும் உரிமை கிடையாது. அது ஒரு மிகப்பெரிய வன்முறை” என்று அந்த நபரை கண்டித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜின் இந்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது. இணையதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பகிர்ந்து அவரை பாராட்டி வருகிறார்கள் மக்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ: ரோகித் பாய்ஸ்  ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை

Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு

மொட்டை அடித்து முருக பக்தனாக மாறிய சுந்தர் சி – குடும்பத்துடன் சாமி தரிசனம்: வீடியோ

இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ: ரோகித் பாய்ஸ்  ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை
IND vs NZ: ரோகித் பாய்ஸ் ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி  முடிவு
Railway Rules: நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்கள்..! சென்னை கூட்ட நெரிசலுக்கு குட்பாய் - ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு
மொட்டை அடித்து முருக பக்தனாக மாறிய சுந்தர் சி – குடும்பத்துடன் சாமி தரிசனம்: வீடியோ
மொட்டை அடித்து முருக பக்தனாக மாறிய சுந்தர் சி – குடும்பத்துடன் சாமி தரிசனம்: வீடியோ
இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
இனி கவலையே இல்ல! எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜாலியா போகலாம்! அப்டேட்டாகும் சென்னை!
Ilayaraja Symphony: ராஜா ராஜா தான்..! இசைவெள்ளம், சிம்பொனியை அரங்கேற்றிய இளையராஜா - வீடியோ வைரல்

IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?

Watch Video: இதுதான் கெத்தா..! பேண்டை கழற்றி பிஎம்டபள்யூ கார் ஓனர் செய்த சம்பவம் - கொத்தாக தூக்கிய போலீசார்

PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு

Embed widget