Jawan on Google: அய்யய்யோ..இந்த அதிசயத்தை பாருங்களேன்.. கூகுளில் போய் ‘Jawan'-ன்னு டைப் பண்ணி பாருங்க..!
நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் வெளியாகியுள்ளதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் ஸ்பெஷலான சம்பவம் ஒன்றை செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் வெளியாகியுள்ளதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் ஸ்பெஷலான சம்பவம் ஒன்றை செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி ஆர்யா நடித்த ராஜா ராணி படம் தமிழ் சினிமாவில் இயக்குநரானவர் அட்லீ. தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 படங்களை பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். அதன் எதிரொலியாக இந்தியில் இயக்குநராகும் வாய்ப்பு கிட்டியது. அட்லீயின் முதல் படமாக உருவான ‘ஜவான்’ நேற்று (செப்டம்பர் 7) உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, யோகிபாபு, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தி,தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன்மூலம் நேரடியாக இந்தியில் அனிருத்தும் அறிமுகமாகியுள்ளார்.
Readyyyyy? Because Jawan ko #DhoondengeTohMilega!#JawanOnGoogle@iamsrk @RedChilliesEnt pic.twitter.com/v2XlwXvCq7
— Google India (@GoogleIndia) September 8, 2023
ஏற்கனவே ஜவான் படத்தின் 2 ட்ரெய்லர்கள், பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இப்படியான நிலையில் நேற்று வெளியான ஜவான் படம் இந்தி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது. அதேசமயம் தமிழில் படம் பார்க்க சென்ற ரசிகர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. காரணம் ஜவான் படத்தில் இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தான் தமிழில் எடுத்த படங்கள், நடிகர் விஜய்யின் மேனரிசங்கள் என அனைத்தையும் கலந்து கட்டி ஜவான் படம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படியான நிலையில் ஜவான் படம் முதல் நாளில் ரூ.129 கோடி கலெக்ஷனை பெற்றுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான ஷாருக்கானின் ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தெரிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் #JawanCreatesHistory, SRK GOD OF BOX OFFICE ஆகிய ஹேஸ்டேக் மூலம் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இப்படியான நிலையில் கூகுளில் ஆங்கிலத்தில் #Jawan என டைப் செய்தால் அதில் ஒரு வாக்கி டாக்கி போன்ற ஆப்ஷன் காட்டப்படும். அதனை கிளிக் செய்தால் ஜவான் படத்தில் ஷாருக்கான் முகத்தில் கட்டு போட்டதை போல கூகுள் பக்கமும் பேண்டேஜ் போட்டது போல கட்டுகளால் நிரம்பும். இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.