Janhvi Kapoor Ooty Video: ஊட்டியில் ஜிப் லைனிங் மேற்கொண்ட நடிகை ஜான்வி கபூர்.. இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்!
சினிமாத்துறையில் மட்டுமில்லாது சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்.
நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது மேற்கொண்ட ஜிப் லைனிங் காட்சிகள் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. தேயிலை தோட்டங்களுக்கு இடையே நண்பர்கள் மற்றும் சகோதரியுடன் தேயிலை தோட்டத்தில் உலாவரும் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் ஜான்வி கபூர் பதிவிட்டுள்ளார்.
எங்குபார்த்தாலும் பசுமையான காட்சிகள், கம்பீரமான மலைகள், தேயிலை தோட்டங்கள் என கண்களைக் கவரும் மலைகளின் அரசி தான் ஊட்டி. இந்த அழகைக் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாடு, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருகைப்புரிவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் சமீபத்தில், பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர், தன்னுடைய நண்பர்கள் மற்றும் சகோதரியுடன் ஊட்டிக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துள்ள புகைப்படங்களைத் தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் லைக்ஸ்குகளை தெறிக்கவிடுகின்றனர்.
தன்னுடைய இன்ஸ்டா பதிவில், பசுமையான காட்சிகள், கம்பீரமான மலைகள் மற்றும் வெள்ளை மேகங்களால் அலங்கரிக்கப்பட்டு அதிர்ச்சியூட்டும் நீல வானத்துடன் தேயிலைத் தோட்டத்தில் நின்றுகொண்டு கனவு காண்பது தோன்ற விதவிதமான புகைப்படங்கள், போன்றவை அனைவரையும் ரசிக்க செய்துள்ளது. இதோடு டீ இலை பறிக்கும் ஒரு நாள்( "Teal leaf picking kind of a day.") என்று தனது இன்ஸ்டா பதிவுக்கு தலைப்பிட்டதோடு அங்கு எடுத்துள்ள புகைப்படங்களையெல்லாம் பதிவிட்டுள்ளார். மேலும் தேயிலைத்தோட்டத்திற்கு நடுவே தேயிலை இலைகளைப் பறித்து ஜிப் லைனிங்(Zip – lining) செய்த காட்சிகளையும் பதிவிட்டுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஊட்டி டைரிஸ் என் தலைப்பில் நடிகை ஜான்வி பதிவிட்டுள்ள அனைத்தும் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram
நடிகை ஜான்வி கபூர், பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், கடைசியாக 2021 ஆம் ஆண்டு ரூஹி திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. சினிமாத்துறையில் மட்டுமில்லாது சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனுக்கும் மேல் ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்.