Jailer update: ஜெயிலர் படக்குழுவில் மகன்களுடன் இணைந்தார் பிரபல சண்டை பயிற்சியாளர்!
அகாண்டா புகழ் ஸ்டண் சிவாவும் அவரது மகன்கள் கெவின் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் ஜெயிலர் படத்திற்கான ஆக்சன் சீக்வென்சை இயக்க உள்ளனர் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜெயிலர் திரைப்பட சூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து படம் குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வரத் தொடங்குகிறது. படத்தின் ஆக்ஷன் சீக்வன்ஸ் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அகாண்டா புகழ் ஸ்டண்ட் சிவாவும் அவரது மகன்கள் கெவின் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் ஜெயிலர் படத்திற்கான ஆக்சன் சீக்வென்சை இயக்க உள்ளனர் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஸ்டன் சிவா பிரபல ஆக்சன் இயக்குநர் ஆவார். இவர் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான கனல் கன்னன் மற்றும் ராம்போ ராஜ்குமார் ஆகியோரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தவர். அதன்பின் மாஸ்டராக உருவெடுத்தார்.
#Akhanda fame @StunShiva8 & his sons Kevin and Steven to choreograph action sequences for #Jailer pic.twitter.com/hIVgDxcz0f
— Rajasekar (@sekartweets) August 22, 2022
தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள அனலரசு, ஸ்டண்ட் சில்வா, பெசன்ட் ரவி, அன்பறிவு, ராஜேந்திரன் ஆகியோர் இவரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்துள்ளார்கள். இவரது மகன் கெவின் அடங்கமறு திரைப்படத்தில் முதன் முதலில் ஸ்டன்ட் ஒருங்கிணைப்பாளராக அறிமுகமானார்.
அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்தின் 169 ஆவது படமான இதை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்குவது அனைவரும் அறிந்ததே. சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.‘பீஸ்ட்’ -ன் படுதோல்விக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் நெல்சனுக்கு இதில் வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற பிரஷ்ஷர். அதனால் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறார் நெல்சன். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. அதில் ஸ்டைலாக ரஜினி நிற்கும் உருவ அமைப்பும், இன்றைய தேதியும் குறிக்கப்பட்டுள்ளது.
22.8.22 - 11:00 AM 🔥#Jailer pic.twitter.com/VIieMFd3qO
— Sun Pictures (@sunpictures) August 21, 2022
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை அவரே உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்காமோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளாமே நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஜினியுடன் இணைந்து படையப்பாவில் நடித்த ரம்யா கிருஷ்ணன், 20 வருடங்களுக்கு பிறகு நடிக்கவிருக்கிறார். நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் 2002-ல் வெளியான பாபா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.
முன்னதாக மேடை ஒன்றில் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம் நெல்சன் கூறியிருந்தார். சொன்னபடி இன்று ஷூட்டிங் தொடங்கி உள்ளது. ரஜினியின் அடுத்தப்படம் தொடங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்