Jailer: ஜெயிலரில் ரஜினிக்கு இத்தனை கோடி சம்பளமா..? 2 காட்சியில் மட்டுமே நடித்தவருக்கு கோடியில் கொட்டிய பணம்..!
ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்த 4 பேருக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் கோடிகளில் பணத்தை கொட்டி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் படம் ரிலீசாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டிருக்கும் நிலையில் படத்தில் கேமியோ ரோலில் நடித்த 4 பேருக்கு கோடிகளில் பணத்தை கொட்டி கொடுத்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ஜெயிலர். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாகி ஷெராஃப், சுனில், தமன்னா, வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 10ம் தேதி படம் ரிலீசான ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.225 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தில் நடித்துள்ள முன்னணி பிரபலங்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலரில் மகனுக்காக எதிரிகளை பழிவாங்கும் முத்துவேலாக நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ள ரஜினிக்கு ரூ.110 கோடி வரை சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ரஜினியை தவிர்த்து மற்ற நடிகர்களுக்கும் கோடி கணக்கில் பணத்தை அள்ளி கொடுத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
ஜெயிலர் படத்தில் இரண்டாம் பாதியில் இரண்டே காட்சிகளில் வரும் மோகன்லாலிற்கு ரூ.8 கோடியும், முதல் பாதியில் ஒரு காட்சி, இரண்டாம் பாதியில் ஒரு காட்சி என இரண்டு காட்சிகளில் இடம்பெற்றிருக்கும் சிவராஜ்குமாருக்கு ரூ.4 கோடியும், மொத்த படத்திலும் மூன்றே காட்சிகளில் நடித்திருந்த ஜாக்கி ஷெராஃபிற்கு ரூ. 4 கோடியும் சம்பளமாக வழங்கியதாக கூறப்படுகிறது.
காவாலா பாடலில் ஹைப் ஏற்றி ரசிகர்களை ரீல்ஸ் போட வைத்த தமன்னா, மொத்தமாக 3 காட்சிகளில் நடித்திருப்பார். அவருக்கு ரூ.4 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. படையப்பா படத்துக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த ரம்யாகிருஷ்ணனுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் இரண்டு அல்லது மூன்று காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் கோடிக்கணக்கில் சம்பளத்தில் வாரி கொட்டி கொடுத்துள்ளதாக சிலர் விமர்சித்து வருகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படம் வெற்றிகரமாக வசூலை வாரி குவித்து வருகிறது.
இந்த சூழலில், படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்னதாக ரஜினி இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். இமயமலைக்கு செல்லும் வழியில் பத்ரிநாத் உள்ளிட்ட கோவில்களில் ரஜினி வழிப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: OTT Release: தாலி முதல் தி மங்கி கிங் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகும் புதிய வெப் தொடர்கள்