STR49: சிம்புவிற்கு 100 கோடி பிசினஸ் இல்லை?.. கில்லி மாதிரி வெற்றிமாறன் செய்வாரா?.. பட லிஸ்ட் பெரிசு
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு மற்ற நடிகர்களை போன்ற பிசினஸ் இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பத்து தல. இப்படத்திற்கு பிறகு தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியை சந்தித்தது. கலவையான விமர்சனங்களால் ரசிகர்கள் இப்படத்தை ட்ரோல் செய்ய தொடங்கினர். தக் லைஃப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிம்பு கொல்லப்பட்டது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இப்படத்தை தொடர்ந்து சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
சிம்புவிற்கு பிசினஸ் இல்லை
சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் படங்களின் லிஸ்ட் பெரிதாக இருந்தாலும், இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றாலும், பெரிய அளவில் பிசினஸ் இல்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிம்பு நடித்தால் நிச்சயம் 100 கோடி பந்தயம் அடிக்குமா என்பது சந்தேகம்தான் என திரை விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் டீசன்ட் ஆன பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சனை தந்தது. அது தவிர வேறு எந்த படங்களில் பெரிய நம்பர்ஸை தொடவில்லை. நடிகர் சிம்பு செய்த தவறுகளை புரிந்துகொண்டு சினிமா பிசினஸ் என்பது தெரியவந்திருக்கிறது. இனி வரும் காலம் சிம்பு காலமாக இருக்கும் என திரை விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2026 சிம்பு காலம் தான்
அதேபோன்று ஆரம்ப காலகட்டத்தில் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த சிம்பு தற்போது இளம் இயக்குநர் படங்களில் நடிக்க தயக்கம் காட்டுவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், எஸ்டிஆர்48, எஸ்டிஆர்50, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அடுத்த இயக்க இருக்கும் படம் என 3 இயக்குநர்களும் ஒன்று இரண்டு படங்களை இயக்கியவர்கள் தான் என்கின்றனர். எனவே 2026 சிம்புவிற்கு சிறந்த ஆண்டாக இருக்கும் என நம்பலாம். வெற்றிமாறன் இயக்கும் படம் வடசென்னை உலகத்திற்குள் இருப்பதால், மக்கள் கொண்டாடும் வெற்றியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் ராஜன் வகையறா கதையாக இருக்கும் என்பதே யூகமாக இருக்கிறது.






















