மேலும் அறிய

Siragadikka Aasai: ரோகிணி இவ்வளவு பட்டும் திருந்தவே மாட்டாங்களா.. ஸ்ருதிக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷ் மீனா வீட்டில் இருப்பதை பார்த்து பதறி போன ரோகிணி தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வை இங்கு காணலாம். முத்து வீட்டிற்கு கிரிஷா கூட்டி சென்றால் விஜயா திட்டுவார் என்பதால், கிரிஷ் மீனா வீட்டில் பத்திரமாக இருக்கிறான். அங்கு மீனாவின் அம்மாவும், சத்யாவும்  பாசமாக பார்த்து கொள்கிறார்கள். கிரிஷிற்கு சாப்பாடு ஊட்டிவிடும்போது எதிர்பாராதவிதமாக அவனது அம்மா குறித்து கேட்டதும் தடுமாறுகிறான். பின்னர், எதற்கு என்று கேட்டதும் உனக்கு உங்க அம்மா ஸ்நாக்ஸ் வாங்கி வருவாங்க என்று சத்யா கூறுகிறார். 

மீனா வீட்டில் இருக்கும் கிரிஷ்

ஆனால், கிரிஷ் எதுவும் பேசாமல் மெளனமாகவே சாப்பிடுகிறான். உண்மையை சொன்னால் அம்மா ( ரோகிணி) மாட்டிக்குவாங்க என்பதால் வாயை திறக்காமல் இருக்கிறான். கிரிஷ் மீனா வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட ரோகிணி என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கம் வராமல் அங்கும் இங்குமாய் அலைமோதுகிறாள். இதை பார்த்த மனோஜ் என்ன ரோகிணி தூங்கலையா என்று கேட்க, தூக்கம் வரலை என்ன ஆச்சுனு தெரியலை என பதிலளிக்கிறாள். ஆனால், மனோஜ் கொஞ்சம் நக்கலாக பேச ரோகிணிக்கு எரிச்சல் வருகிறது. மனோஜ் பதில் பேசாமல் மீண்டும் தூங்குகிறார். 

அடம்பிடிக்கும் ரோகிணி

அடுத்த நாள் முத்து மற்றும் மீனா இருவரும் கிரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வந்து விடுகின்றனர். பள்ளி மேனஜரை பார்த்ததும் கிரிஷ் பயப்படுவதால், ஸ்கூல் முடிந்ததும் நாளைக்கு வந்து வீட்டுக்கு அழைத்து செல்வதாக முத்து கூறுகிறார். முத்துவும் மீனாவும் ஸ்கூலை விட்டு கிளம்பிவிட ரோகிணி மகேஸ்வரியின் உதவியோடு கிரிஷை சந்தித்து பேசுகிறாள். அப்போது க்ரிஷை அம்மா சொல்வதை கேளு, இந்த ஸ்கூல் நல்லா இருக்கு. இதை விட்டு எங்கே போற, நீ மகேஸ்வரி வீட்டில் தான் இருக்கணும் என்று ரோகணி அதட்ட தொடங்கியதும், . நீ வந்து கூட்டிட்டு போ இல்லனா மீனா ஆண்டி வீட்டில் தான் இருப்பேன் என அடம் பிடிக்கிறான். கிரிஷை அதற்குள் மேல் திட்டமுடியாமல் ரோகிணி திணறி போய் நிற்கிறார். 

25 லட்சம் கேட்கும் நடிகை

ஸ்ருதி தன்னுடைய ரெஸ்டாரெண்ட் திறப்பு விழாவிற்கு நடிகை ஒருவரை பார்த்து பேசுகிறார். அவர் முதலில் பாசமாக பேசினாலும் திறப்பு விழாவிற்கு 25 லட்சம் கேட்க ஸ்ருதி அதிர்ச்சியடைகிறார். என்னுடைய பட்ஜெட்டே அவ்வளவுதான். வேண்டாம் எனக் கூறி கிளம்பிவிடுகிறார். அடுத்ததாக மீனாவின் வீட்டில் சத்யாவுடன் மீனா பேசிக்கொண்டு இருக்கிறார். கிரிஷின் பள்ளியில் பேசிய விஷயத்தை சொல்ல சத்யாவும் அவன் இங்கே இருக்கலாம் என்கிறார். அந்த நேரத்தில் சீதா வந்து பேசிக்கொண்டு இருக்கிறார். கிரிஷின் மனசு சரியில்லை. அதனால் ஒரு கவுன்சிலிங் கொடுக்கணும் என்கிறார். வீட்டில் இருக்கும் போது தனது கடை திறப்பு விழாவிற்கு நடிகையை அழைத்தது குறித்து ஸ்ருதி கூற, மனோஜ் நான் வரட்டா என்றதும், முத்து அவரை கலாய்க்க என கலகலப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும் ரோகிணிக்கு இருக்கும் தலைவலி க்ரிஷ் தான். அதில் இருந்து எப்படி தப்பிப்பார் என்பதே பலரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget