Vijay | ஷாருக்கான் - அட்லீ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய்? தீயாய் பரவும் செய்தி!
தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் விஜயை இயக்கியதும் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்குகிறார் அட்லீ.
ஷாருக்கான் - அட்லீ இணைந்துள்ள புதிய படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து மூன்று திரைப்படங்கள் விஜயை இயக்கியதும் பாலிவுட்டில் ஷாருக்கானை இயக்குகிறார் அட்லீ. இந்த செய்தி வந்ததிலிருந்தே அதன் மீதான பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதுவும் பிகில் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் ஷாருக்கானுடனான திரைப்படம் குறித்து செய்திகள் எதுவும் வராததால் திரைப்படம் குறித்த பல யூகங்களை சமூக வலைத்தளங்களில் விவாதித்துக்கொண்டிருந்தன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீப காலங்களில் அத்திரைப்படம் குறித்த செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
சில நாட்கள் முன்னர் கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் இருக்கிறார் என்ற செய்தி வந்ததும், தமிழ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அதை தொடர்ந்து திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பெயரும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர தொடங்கியது. சன்யா மல்ஹோத்ரா இணைவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. இந்நிலையில் மேலும் ஒரு தகவலாக இப்படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தென்னிந்தியாவில் நடிகர் விஜய்க்கு பெரிய மார்கெட் இருப்பதால் அவருடைய சிறப்புத் தோற்றம் வியாபார ரீதியாக பெரும் உதவியாக இருக்குமென படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வமான செய்தி எதுவுமே வெளியாகாத நிலையில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்தால் நிச்சயம் மாஸாக இருக்குமென அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்
‛என்னை வெச்சு செஞ்சுட்டாங்க... இனி அந்த பக்கமே வர மாட்டேன்’ கண்ணீருடன் விடைபெற்ற சூர்யா தேவி!
ஆக்ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது என்றும் இந்த படத்தில் பாலிவுட் கிங் காங் என அழைக்கப்படும் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஒரு கேரக்டரில் நடிக்க சான்யா மல்ஹோத்ரா நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது. இவர் ஏற்கனவே ஆமீர்கானுடன் இணைந்து, தங்கல் படத்தில் நடித்திருந்தார். 180 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடிக்க இயக்குநர் அட்லி முடிவு செய்து இருப்பதாகவும், பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‛யப்பாடா... ஆன்லைன் புக்கிங் ஆரம்பம்...’ தலைவியா... லாபமா... எப்படி இருக்கிறது விற்பனை?
படம் தொடர்பான ஷூட்டிங் இந்தியா, வெளிநாடு என பல இடங்களில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இந்தியாவில் சில நகரங்களை படக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி புனேவின் 10 நாட்கள் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. புனே மட்டுமின்றி, மும்பையிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை தவிர்த்து துபாயிலும் அங்குள்ள சில இடங்களிலும் ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.