Iravin Nizhal in Amazon Prime : ஓடிடியில் வெளியான 'இரவின் நிழல்'.. மகிழ்ச்சி இல்லை என பார்த்திபன் ஆதங்கம்.. என்ன காரணமோ?
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான 'இரவின் நிழல்'. அறிவிப்பு இன்றி அறிவிப்பு வெளியானது என நடிகர் பார்த்திபன் பகிர்ந்த சோசியல் மீடியா பதிவு
'இரவின் நிழல்' திரைப்படம் ஓடிடியில் இன்று வெளியானது குறித்த தனது பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன்.
நேர்மறையான விமர்சனங்களை குவித்த இரவின் நிழல் :
திரை பிரபலங்கள் மத்தியிலும் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டை பெற்ற இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த 'கதை திரைக்கதை வசனம்', 'ஒத்த செருப்பு' திரைப்படங்களை தொடர்ந்து 'இரவின் நிழல்' திரைப்படத்தையும் இயக்கி நடித்திருந்தார். பார்த்திபனின் அகிரா பிலிம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் இணைந்து தயாரித்த இப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிஜிடா சகா, பிரியங்கா ரூத் மற்றும் பலர் துணை நடிகர்களாக நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.
மகிழ்ச்சியை கூட…
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 12, 2022
அறிவித்து அனுபவிக்க முடியவில்லை.
அமேசானில் ‘இரவின் நிழல்’ எனக்கேத் தெரியாமல்!
Please
நேரம் ஒதுக்கி முழுமையாய் பாருங்கள்(single shot)
ஆதரவை தர வேண்டுகிறேன்!
நன்றியுடன் pic.twitter.com/aX02ySAJNb
ஓடிடி யில் அறிவிப்பு இன்றி வெளியானது 'இரவின் நிழல்' :
சில நாட்களாகவே அவ்வப்போது நடிகர் பார்த்திபன் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் 'இரவின் நிழல்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அப்டேட் செய்து வந்தார். அந்த வகையில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் பார்த்திபன் ஒரு பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார், அறிவிப்பு இன்றி வெளியாகியுள்ளது மகிழ்ச்சியை கூட அறிவித்து, அனுபவிக்க முடியவில்லை. நேரம் ஒதுக்கி இப்படத்தினை முழுமையாக பார்த்து ஆதரவை தரவேண்டும் என ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் விடுத்துள்ளார் நடிகர் பார்த்திபன்.
#IravinNizhal (Tamil)
— Asok (@itsmeasok) November 12, 2022
Now Streaming On #PrimeVideo pic.twitter.com/0MeAzBkGa0
கவலைகளை மறக்க செய்து வெற்றி :
உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்றது. மேலும் 'இரவின் நிழல்'திரைப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்னரே இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் அங்கீகாரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் திரைப்பட விழாக்களிலும் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. பல சர்ச்சைகள் இப்படத்திற்கு ஏற்பட்டாலும் மக்களை ஆதரவும் பாராட்டுகளும் குவிந்ததால் அந்த கவலைகள் அனைத்தும் பறந்து போனது. இப்படம் திரையரங்கில் வெளியாகி நான்கு மாதங்களுக்கு பிறகு பல போராட்டங்களுக்கு பின்னர் இன்று தான் ஓடிடியில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.