மேலும் அறிய

Parthiban Explanation: ‘எங்கிட்ட ஆதாரம் இருக்கு.. ஒவ்வொன்னா ரிலீஸ் பண்றேன்..’ இரவின் நிழல் சர்ச்சையால் பார்த்திபன் ஆதங்கம்..

இரவின் நிழல் திரைப்படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்பதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக இயக்குநர் பார்த்திபன் பேசி இருக்கிறார்.

இரவின் நிழல் திரைப்படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்பதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக இயக்குநர் பார்த்திபன் பேசி இருக்கிறார். 

இரவின் நிழல் :

இது குறித்து பேசிய பார்த்திபன், “ இரவின் நிழல் அமேசான் ப்ரைமில் இன்று வெளியாகி இருக்கிறது. முதலில் மகிழ்ச்சி.. ஆனால், இன்று எதுவும் அவ்வளவு சுலபமாக நடப்பதில்லை.  இந்தப்படம் ஓடிடியில் வெளியாக போகிறது என்பதே யாருக்கும் தெரியவில்லை. பெரிய படங்களுக்கே நிறைய பிரோமோஷன் தேவைப்படும் போது, இந்த மாதிரியான படங்களுக்கு எவ்வளவு பிரோமோஷன் தேவைப்படும். 

அமேசான் ப்ரைமில் IMDBயில் ஏதோதோ கமெண்ட்ஸ்ல்லாம் வருகிறது. அது பின்னாடி என்ன சூழ்ச்சி இருக்கிறது என்பது தெரியவில்லை. அது சூழ்ச்சியா என்றும் தெரியவில்லை.  அது கிட்டத்தட்ட 20 மணி நேரம் கழித்து மாறியிருக்கிறது. அது இன்னும் ஷாக்கிங்காக இருக்கிறது. இப்போது புதிதாக வருகிற கமெண்ட்ஸ்ல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. வருத்தமாக இருக்கிறது. ஒரு குடம் நிறைய இருக்க கூடிய பாலில் ஒரு சொட்டு விஷம்தான் எதிர்மறை விமர்சனம் என்பது.

ஆதாரங்கள் உள்ளது : 

இரவின் நிழல் தற்போது இந்தியாவில் மட்டுமே தெரிகிறது. எப்போது உலகம் முழுக்க தெரியும் என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் கலைஞர் டிவிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப்படம் அவர்கள் மூலமாகத்தான் அமேசான் ப்ரைமுக்கு சென்றிருக்கிறது. நான் நேரடியாக படத்தை விற்கவில்லை.  1917 படத்தை நான் சென்று பார்த்தேன். அது சிங்கிள் ஷாட் படம் என்று சொல்லப்பட்டாலும், அதில் எடிட்டிங் இருந்தது. இந்த மாதிரி நிறைய படங்கள். அது என்ன மாதிரியான விளம்பரமா இருந்தாலும், நான் அந்தப்படத்தை சென்று பார்க்கிறேன். அது எனக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.  இரவின் நிழல் படத்தில் இடம்பெற்றிருப்பதை,  உலகத்தில் இதுவரை யாரும் இதை செய்யவில்லை. கூகுள் செய்து பார்த்தால் கூட தெரியும். அதே போல இரவின் நிழல் உலகின் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த ஆதாரங்களை நான் ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன். 

அதே போல அமேசான் ப்ரைமில் படத்திற்கு முன்னதாக இடம் பெற்ற மேக்கிங் காட்சி இல்லை என்று சிலர் கேட்டு இருந்தீர்கள். அதன் உரிமை வேறு ஒருவரிடம் இருக்கிறது. ஆகையால் அது தனிப்பட்ட முறையில் வெளியிடப்படும்” என்று அவர் பேசி இருக்கிறார். 

இரவின் நிழல் : 

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவரான பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல். கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியான இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இரவின் நிழல் படம் தான் உலகிலேயே முதல் “நான்லீனியர் சிங்கிள் ஷாட்” படம் என்ற அடையாளத்துடன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

ஆனால் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் fish and cat என்ற படம் தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றும், இரவின் நிழல் இல்லை என்றும் தெரிவித்து பார்த்திபனை குற்றம்சாட்டினார். இதற்கிடையில் இரவின் நிழல் படம் இன்று ஓடிடியில் வெளியானது. பல முறை இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போன நிலையில்,  நேற்று காலை தனக்கு கூட தெரிவிக்காமல் அமேசானில் படம் வந்துவிட்டதாக பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

அதேசமயம் முறையான அறிவிப்போடு வந்திருக்கலாம் என்ற தனது ஆதங்கத்தையும் வீடியோ வாயிலாக அவர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதிலும் கூட உலகின் முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் இரவின் நிழல்தான் என அவர் கூறியிருந்தார்.

ஆனால் அமேசான் ப்ரைம், தனது தளத்தில் இப்படம் உலகின் 2வது நான்லீனியர் சிங்கிள் ஷாட் படம் என தெரிவித்து இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

மேலும் தியேட்டரில் இரவின் நிழல் படத்தின் கதைக்குள் செல்வதற்கு முன் காட்டப்படும் மேக்கிங் காட்சிகள் இடம் பெறவில்லை. இதனை குறிப்பிட்டு பலரும், சமூக வலைத்தளத்தில் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும் என தெரிவித்து அமேசான் தளத்தில் இடம் பெற்ற இரவின் நிழல் படம் குறித்த ஸ்க்ரீன்ஷாட்டுகளை பகிர்ந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பார்த்திபன் என்ன சொல்லப் போகிறார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், அதற்கான விளக்கம் அளிக்கும் வகையில் நேற்று மாலை அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், “அன்பான ரசிகர்களுக்கு பணிவான வணக்கம். இரவின் நிழல் திரைப்படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை. அந்த பெருமையுடன் மட்டுமே இந்தப்படம் தயாரிக்கப்பட்டது. அந்த பெருமைக்காக மட்டுமே, மிகப்பெரிய பொருட் செலவில், 3 வருடங்களாக என்னை மாதிரி அர்ப்பணிப்புள்ள கலைஞனால் எடுக்கப்பட்ட படம் இது. இந்தப்படம் முதல் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்  படமா அல்லது இராண்டாவது நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்பதை தாண்டி, இந்தப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி இருக்கிறது. அனைவரும் படத்தை பாருங்கள். முடிவை உங்களுடைய பார்வைக்கே விட்டு விடுகிறேன்.” என்று பேசி இருந்தார். ஆனாலும் சர்ச்சை அடங்காத நிலையில் இந்த நீண்ட விளக்கத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
"பெங்கால் புலி நானு.. முடிஞ்சா பிடிச்சு பாருங்க" இடதுசாரி மாணவர்களை கதறவிட்ட மம்தா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Admk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
Myanmar Earthquake: மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்: தரைமட்டமான 30 மாடி கட்டடம் : உயிரிழப்பு எவ்வளவு?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
"பெங்கால் புலி நானு.. முடிஞ்சா பிடிச்சு பாருங்க" இடதுசாரி மாணவர்களை கதறவிட்ட மம்தா!
Trump Vs Iran: ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
ட்ரம்ப் மிரட்டலுக்கு பணிந்ததா ஈரான்.? பதில் கடிதத்தில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
TVK Vijay Speech: ”மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே”விட்டு விளாசிய தவெக தலைவர் விஜய் - அனல் பறந்த பேச்சு
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
மனைவியைக் கொன்று உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பிச் சென்ற கணவர்; புனேவில் சிக்கியது எப்படி?
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: தரைமட்டமான கட்டடங்கள்! தலைதெறிக்க ஓடிய மக்கள்
Embed widget