Watch Video| 'புஷ்பா.. புஷ்பராஜ்.. அடங்காதவன்டா” - ஜடேஜாவின் வைரல் புஷ்பா ரீல்..
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மிகவும் வைரலாகியுள்ளது.
![Watch Video| 'புஷ்பா.. புஷ்பராஜ்.. அடங்காதவன்டா” - ஜடேஜாவின் வைரல் புஷ்பா ரீல்.. Indian cricketer Ravindra Jadeja Makes instagram reel on Allu Arjun's Pushpa movie scene Watch Video| 'புஷ்பா.. புஷ்பராஜ்.. அடங்காதவன்டா” - ஜடேஜாவின் வைரல் புஷ்பா ரீல்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/23/2339f2440501a914fe7acf854b00004d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிவுடனான தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் இந்தியாவில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்தச் சூழலில் அவர் தன்னுடயை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
ரவீந்திர ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வாரம் வெளியான புஷ்பா திரைப்படம் தொடர்பான ரீல்ஸை பதிவிட்டுள்ளார். அதில்,”நான் யாருக்கும் தலைவணங்க மாட்டேன்” என்ற வசனத்தை ஜடேஜா தன்னுடைய பானியில் பேசி அந்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் இதை பகிர்ந்தும் வருகின்றனர்.
View this post on Instagram
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் படம் புஷ்பா(Pushpa). சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புஷ்பா படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மட்டுமின்றி ஃபஹத் பாசில் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தூக்கி சுமக்கவும் தெரியும் தூக்கிப்போட்டு மிதிக்கவும் தெரியும்.. வெளியானது யானை டீசர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)