CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
உதயநிதியை கைது செய்து ரீமாண்ட் செய்வது முதல்வர் விஜயின் நோக்கமல்ல. அவரை தஞ்சை வரை, காவல் வாகனத்தில், போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுச் சென்று,ஒரு நாள் மட்டும் அவர் சுதந்திரத்தை பறித்துக்காட்டுவதுதான்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தமிழ்நாடே திமுகவினரால் போராட்டகளமாகியிருக்கும் நிலையில், காலையிலேயே தலைமைச் செயலகம் சென்று ஆய்வுக் கூட்டம், சந்திப்பு, புதிய திட்டங்கள் திறப்பு என படு கூலாக பணிகளை செய்துகொண்டிருக்கிறார் முதல்வர் விஜய்.
விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லையா ?
முதல்வர் விஜய்க்கு அரசியல் தெளிவில்லை, அவரை சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டாலும் கூட உதயநிதி கைது என்பது நேரடியாக முதல்வர் விஜயின் கண் அசைவிலேயே நடந்தேறியிருக்கிறது. இதன்மூலம், தன்னையும் பெண்களையும் யார் கீழ்த்தரமாக விமர்சித்தாலும் அவர்களை விட மாட்டேன் என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் கைதின் மூலம் திமுகவினருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வார்னிங்காகவே கொடுத்திருக்கிறார் அவர்.
அதிர்வலைகளை தெரிந்தே கைதுக்கு சம்மதம் சொன்ன விஜய்
நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், உதயநிதி கைது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துமே முதல்வர் விஜய் இந்த கைதுக்கு அனுமதி அளித்திருக்கிறார். அதோடு, அவரை சென்னையில் கைது செய்து தஞ்சாவூர் வரை அழைத்துச் சென்று, அலைகழிப்பதன் மூலம் இதுபோன்று இனி பேசினால், எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் நான் செல்வேன் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் முதல்வர் விஜய். உதயநிதி கைது செய்யப்படுவது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையிலும் அது நாடாளுமன்றம் வரை ஒலித்த நேரத்திலுமே, அவற்றையெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அசால்டாக தலைமைச் செயலகம் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார் அவர்.
ஒரு நாள் பறிபோன சுதந்திரம்
உதயநிதியை கைது செய்து ரீமாண்ட் செய்வது முதல்வர் விஜயின் நோக்கமல்ல. அவரை தஞ்சாவூர் வரை, காவல் வாகனத்தில், காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுச் சென்று, ஒரே ஒரு நாள் மட்டும் அவர் சுதந்திரத்தை பறித்துக் காட்டி எச்சரிக்கை விடுப்பதுதான் அவரின் நோக்கம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்























