PAARAA Song Lyrics: ”எம் தாய் மண்மேல் ஆணை! இது தமிழ் மானத்தின் சேனை” - இந்தியன் 2 முதல் பாடல் வரிகள்!
Indian 2 First Single Lyrics: : இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் பாரா பாடல் வரிகள் இதோ
இந்தியன் 2
The warrior has arrived! 🔥 1st single #PAARAA from INDIAN-2 is OUT NOW! 🤩🥁 Echoing the fearless spirit and the power of an Indian. 🇮🇳💪
— Lyca Productions (@LycaProductions) May 22, 2024
▶️ https://t.co/9VwuOyW2zm
Rockstar @anirudhofficial musical 🎹
Lyrics @poetpaavijay ✍🏻
Vocals @anirudhofficial #ShruthikaSamudhrala 🎙️… pic.twitter.com/OoAkIOFKhU
இந்தியன் 2 படத்தின் முதல் பாடலான் பாரா தற்போது வெளியாகியுள்ளது. பாரா பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அனிருத் மற்றும் ஷ்ருதிகா சமுத்ரலா இருவரும் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளார்கள். இப்பாடலின் பாடல் வரிகள் இதோ
பாரா....
வருவது ஓராட் படையா
வீரா....
விழுப்புண் அலங்காரா
மாறா...
ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா....
வரிப்புலி வரலாறா...
தினவுள்ள தோள்கள் உண்டு
தீயைக் கக்கும் வாட்கள் உண்டு
புரவிக்கு றெக்கை உண்டு
புயலுக்கும் தான் உருவம் உண்டு
தொட்டுப்பார் கை நடுங்கும்
மூச்சடங்கும் இவனைக் கண்டு
வேட்டைக்கு போகுது பார்
வேங்கை வெகுண்டு
என் தாய் மண்மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
என் தாய் மண்மேல் ஆணை...(2)
பாரா....
வருவது ஓராட் படையா
வீரா....
விழுப்புண் அலங்காரா
மாறா...
ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா....
வரிப்புலி வரலாறா...
கன்னங்கரு இரவு போதாதா நமக்கு
வெள்ளைக்கார நிலா வான்மீது எதற்கு
ரத்தக்கறை படிஞ்ச உன் வாளின் முனைக்கு
முத்தக்கறை ஒன்னு வேணாமா துணைக்கு
உன் காலடி குளம்பாகனும்
உன்மேல விழும்புண் தழும்பாகனும்
உன் கையில் சேரும் வரமாகனும்
இல்ல தாய்மண்ணுக்கே நான் உரமாகனும்
அடியே வெடியே
அல்லிக் கொடியின் மடியே உல்ல
அல்லி வாசம் பாக்க வரட்டா
புரியா வலியே
செல புலியே புலியே
உன்மேல் வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா
துப்பாக்கி தப்பாய்க் கொண்ட
சிப்பாய்கெல்லாம் சிம்மம் நீயே
நட்பாகி நேசம் காட்டும்
குப்பாய்க்கெல்லாம் மகனும் நீயே
அடிமைகள் ரத்த்திற்கெல்லாம்
வெப்பம் தந்த வீரத் தீயே
அதிகார வர்கத்துக்கு அறைகூவல் நீயே
என் தாய் மண்மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
என் தாய் மண்மேல் ஆணை...(2)
பாரா....
வருவது ஓராட் படையா
வீரா....
விழுப்புண் அலங்காரா
மாறா...
ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா....
வரிப்புலி வரலாறா...