Indian 2 : 2D முதல் ஐமேக்ஸ் வரை.. இந்தியன் 2 படத்தை இத்தனை விதமான திரையில் பார்க்கலாமா!
Indian 2 Multiple Formats: கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் எந்த திரையில் பார்க்கலாம் என்பதற்கு ஒரு சிறிய பரிந்துரை இத்தொகுப்பு
கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் சுமார் 250 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ளது இப்படம். தமிழ், தெலுங்கு , இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என எல்லா தரப்பு ரசிகர்களிடமும் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் 2D , IMAX , 4DX , ICE உள்ளிட்ட வடிவங்களில் வெளியாகிறது. முன்னதாக கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹைமர் , டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபள் , விஜயின் லியோ உள்ளிட்ட படங்கள் 2D , IMAX வடிவில் வெளியாகின. ஆனால் ஒரே இந்தியப் படம் இத்தனை வடிவங்களில் திரையிடப் படுவது இதுவே முதல் முறை. இந்தியன் 2 படத்தை எந்த வடிவத்தில் பார்ப்பது ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்
ஐ மேக்ஸ் (IMAX)
IMAX என்பதன் முழு அர்த்தம் Image Maximum. ஐமேக்ஸ் திரையரங்கத்தில் இருக்கும் திரை சாதாரண திரையைவிட 40 சதவீதம் அதிகம் உயரம் கொண்டது. பார்வையாளர்களின் கண்களுக்கு 70 டிகிரீ கோணத்தில் காட்சிகளை விரிவுபடுத்திக் காட்டக் கூடியது ஐமேக்ஸ் திரை அனுபவம். இது தவிர 12 கோணங்களில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப் பட்டு ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை தரக்கூடியது. ஜேம்ஸ் கேமரூன் , கிறிஸ்டோஃபர் நோலன் போன்ற இயக்குநர்களின் படங்கள் ஐமேக்ஸ் திரையில் பார்ப்பதற்கு உகந்தவை. பிரம்மாண்டமான காட்சிகளை கொண்டிருக்கும் இந்தியன் 2 படம் ஐமேக்ஸ் திரையரங்கில் ரசிகர்களுக்கு சிலிக்க வைக்கும் ஒரு அனுபவமாக இருக்கும் .
ICE ( Immersive Cinema Experience)
திரைப்பட ஆர்வலர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப் பட்டதே ICE திரையரங்கம் . தி ஒரு பிரதான திரை பார்வையாளர்களில் இரு பக்கமும் சின்ன சின்னதாக 12 பேனனல்களில் என ஒரே படம் ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கும் அனுபவத்தை ICE திரையரங்கம் ஏற்படுத்தி தருகிறது. ஆக்ஷன் , ஃபேண்டஸி பட காதலர்கள் இந்த திரையரங்குகளில் படம் பார்ப்பதை விரும்புகிறார்கள். இந்தியன் 2 படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. அதனால் விருப்பமுள்ள ரசிகர்கள் ட்ரை பண்ணி பாக்கலாமே
4DX
4DX திரையனுபவம் என்பது சினிமாவில் திரையில் நடக்கும் ஒவ்வொரு குட்டி குட்டி உணர்ச்சிகளையும் உணரும் முயற்சியாக உருவாக்கப் பட்டது. படத்தில் ஒரு வாசனை திரவத்தைப் பற்றி காட்சி வருகிறது என்றால் அந்த வாசத்தை பார்வையாளர்கள் உணரமுடியும் . கார் சேசிங் காட்சிகள் என இந்த திரையரங்கத்தில் படம் பார்ப்பதே ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் மாதிரி என்று சொல்லலாம். முன்னதாக ஷங்கர் இயக்கிய 2.0 படமும் 4DX திரையரங்குகளில் திரையிடப் பட இருந்தது. தற்போது இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் 4DX திரையரங்குகளில் பார்க்கலாம். ஆனால் என்ன இந்த திரையரங்கத்திற்குள் உணவுப் பண்டங்கள் சாப்பிடுவது தடை செய்யப் பட்டுள்ளது.