மேலும் அறிய
Indian 2 Day 1 Box Office: பாக்ஸ் ஆஃபிஸில் மிரட்டும் இந்தியன் 2! முதல் நாள் முடிவதற்குள் இத்தனை கோடிகள் வசூலா!
Indian 2 Day 1 Box office Prediction: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் முதல் நாளில் வசூல் நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

இந்தியன் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்
Source : Other
தமிழ் சினிமா ரசிகர்களால் பல ஆண்டுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் இந்தியன் 2. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம், நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், மனோபாலா மற்றும் ஏராளமானோரின் நடிப்பில் உலகெங்கிலும் உள்ள 3000க்கும் மேற்பட்ட திரையரங்கில் இன்று வெளியானது 'இந்தியன் 2'. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான வெர்ஷனும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குநர் ஷங்கரின் படங்களில் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் இந்தியன் 2 படத்தின் ஆக்ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.

விமர்சன ரீதியாக முதல் நாளே பட்டையை கிளப்பி வரும் 'இந்தியன் 2' திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இன்று காலை முதல் திரையிடப்பட்டு வரும் இந்தியன் 2 திரைப்படம் இதுவரையில் 42.72 சதவீத இடங்களை ஆக்கிரமித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதய நிலவரத்தை படி முதல் நாளில் ரூ. 8.44 கோடிக்கு நிகரான வசூலை எட்டியுள்ளது என பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டுமே ரூ.5 கோடி 80 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கமல்ஹாசனின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் நாள் வசூல் சாதனை படைத்துள்ளது இந்தியன் 2.
Indian 2 Day 1 Morning Occupancy: 42.72% (Tamil) (2D) #Indian2 https://t.co/VGWCLP0k05
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) July 12, 2024
'இந்தியன் 2' படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் வசூல் முதல் நாளில் 35 முதல் 40 கோடி வரை ஈட்டக்கூடும் என சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படங்கள் பெரிய அளவுக்கு வசூலில் வெற்றியைப் பெறவில்லை. அந்த வகையில் இந்தியன் 2 படம் இந்த ஆண்டில் அதிகம் வசூலித்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே 'இந்தியன் 3 ' படப்பிடிப்பும் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டதால் மீதம் உள்ள போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்ததும் 'இந்தியன் 3' படத்தையும் படக்குழு வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement





















