Imman Annachi: நான்கு வரி தான்.. டேபிள்மேட் விளம்பரத்துக்கு இமான் அண்ணாச்சி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இமான் அண்ணாச்சி தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தன் வட்டார வழக்கால் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரலமானார்.
புகழ்பெற்ற டேபிள்மேட் விளம்பரத்தில் நடிக்க தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பற்றி இமான் அண்ணாச்சி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் அறிமுகமானார் இமான் அண்ணாச்சி. தென் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தன் வட்டார வழக்கால் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரலமானார். தொடர்ந்து குட்டீஸ் சுட்டீஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க, கல்லாபெட்டி உள்ள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தொடக்கத்தில் சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ள இமான் அண்ணாச்சி விஜய் தொடங்கி தனுஷ் வரை பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இமான் அண்ணாச்சி விளம்பரங்களிலும் நடித்துப் வந்தார். அவரின் புகழ்பெற்ற விளம்பரமாக டேபிள்மேட் உள்ளது. நிச்சயம் அந்த நிறுவனம் மக்கள் மத்தியில் பிரபலமாக அதற்கு இமான் அண்ணாச்சியும் ஒருவர்.
இப்படியான இந்த விளம்பரம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய இமான் அண்ணாச்சியின் பழைய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. அதில் , ‘என்னிடம் டேபிள்மேட் விளம்பரத்துக்காக அணுகினார்கள். நான் இந்த டேபிள் மேல டீ எல்லாம் குடிச்சிட்டு வைப்போமே அதுதானே டேபிள் மேட், அதுக்கு எதுக்கு விளம்பரம்? என கேட்டேன். அதெல்லாம் இருக்கட்டும், நீங்க வந்துடுங்க, உங்களுக்கு ரூ.5 லட்சம் சம்பளம் என்றார்கள். பரவாயில்லையே நல்ல விஷயமாக இருக்கிறதே என நானும் சம்மதித்தேன். ஷூட்டிங்கிற்கு 4 சட்டை தேவைப்படும் என சொல்லவும் நானும் வச்சிருக்கேன் என கூறினேன்.
அதுல ஒரு சட்டை போட்டுட்டு வாங்க என சொன்னதும், நானோ அதெல்லாம் இருக்கட்டும், முதல்ல டேபிள் மேட்டை காட்டுங்க என கூறினேன். அவர்களும் இந்த இருக்கு பாருங்கன்னு சொல்லி காட்டினார்கள். அதனை தட்டி பார்த்து ‘இந்த டேபிள்மேட்டை நான் வாங்கிட்டேன். நீங்க வாங்கிட்டீங்களா?’ என்ற ஒற்றை வசனத்தை பேச சொன்னார்கள். அடுத்த சட்டையை மாற்றி விட்டு வர சொல்லிவிட்டு, ‘இது மேல் வீட்டுல இருக்கு, கீழ் வீட்டுல இருக்கு, உங்க வீட்டுல இருக்கா?’என வசனம் கொடுத்தார்கள். 4 வசனத்துக்கு ரூ.5 லட்சம் சம்பளம் கொடுத்தார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Imman Annachi: “நான் கஷ்டமேபட்டது இல்ல.. ஆனா கல்யாணத்துக்கு பிறகு” - இமான் அண்ணாச்சி மனைவி வருத்தம்!