Ponniyin selvan: ‘ஏ.ஆர்.ஆர் பாடுனா நல்லா இருக்கும்னு நான்தான் சொன்னேன்’.. ‘பொன்னி நதி’ சீக்ரெட்ஸ் சொல்லும் இளங்கோ கிருஷ்ணன்!
பொன்னி நதி பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடினால் நன்றாக இருக்கும் என்ற சொன்ன போது மணிரத்னம் என்ன சொன்னார் என்பது குறித்து அதன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
பொன்னி நதி பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடினால் நன்றாக இருக்கும் என்ற சொன்ன போது மணிரத்னம் என்ன சொன்னார் என்பது குறித்து அதன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
இது குறித்து பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் தளத்திற்கு ‘பொன்னி நதி’ பாடலின் ஆசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பேசும் போது, “ முதலில் பொன்னி நதி பாடலின் டியூனை ரஹ்மானின் குரலில் ராவாக கேட்டேன். அந்த டியூனை கேட்ட உடனே ரஹ்மானை தவிர வேறு யாரையும் என்னால் இந்த பாடலில் யோசித்து பார்க்க முடியவில்லை.
உடனே இயக்குநர் மணிரத்னத்திடம் சென்று இதை ஏ.ஆர்.ரஹ்மான் சார் பாடினால் நன்றாக இருக்குமே என்று கூறினேன். அவர் கேட்டுவிட்டு சிரித்துக்கொண்டே பார்க்கலாம் என்றார். ஆனால் உண்மையில் அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்பதை எதிர்பார்த்தேன்.” என்று பேசினார். அவர் எதிர்பார்த்தது போலவே ஏ.ஆர்.ரஹ்மான் குரலிலேயே பாடல் வந்து விட்டது.
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 31) வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்பாடலை ( 5 மொழிகளிலும் சேர்த்து) 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பார்த்துள்ளனர். அண்மையில் நடந்த இந்த பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி, “என்ன மாமா செளக்கியாமா.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இது நம்ம படம். தமிழர்களின் படம். படத்தின் கதை அனைவருக்கும் தெரிந்தாலும், இந்தப்படம் எப்படி உருவாகி இருக்கிறது என்பதை பார்க்க அவ்வளவு ஆர்வம் இருக்கிறது.
ஜெயராம் சார் கூட நடிச்சது ஒரு பாக்கியம்
ஜெயராம் சார் கூட நடிச்சது ஒரு பாக்கியம். நானும் ஜெயம் ரவியும் பேசிக்கொள்ளும் போது சொல்வோம். அவர்தான் நடிகர் .. நாம் வெறும் ‘ந’ மட்டும்தான். ஆழ்வார்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் ஜெயராம் சார் நடித்தது என்பது நம்பவே முடியல. நம்பி கதாபாத்திரம் 5 1/2 அடி , இவர் 6 1/2 அடி.. உயரத்தை குறைக்க ஜெயராம் ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார்.
6.30 மணிக்கு முதல் ஷாட்
நதிகள்தான் நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அன்று பொன்னி நதி. இன்று காவேரி. படத்தை எடுக்க முடியாது என்று பல பேர் சொன்னார்கள். படம் தொடங்கும் போது கோவிட் வந்து விட்டது. 120 நாளில் பொன்னியின் செல்வன் பாகம் 1 பாகம் 2 இரண்டையும் மணி ரத்னம் எடுத்து முடித்து விட்டார். படப்பிடிப்பில் 2.30 மணிக்கு மேக்கப் போடுவார்கள். மேக்கப் போடுவதற்காக 30 பேர் தயாராக இருப்பார்கள். 6.30 மணிக்கு முதல் ஷாட் வைப்போம். இந்த மாதிரி படம் எடுக்க இன்னொரு இயக்குநர் பிறந்து 30 வருடங்கள் வளர்ந்து வரவேண்டும்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.