Ram Gopal Varma: படம் ஓடவே இல்ல; சொந்த பணத்தை போட்டு திரையரங்கில் ஓட வைத்தார்: ராம் கோபால் வர்மா சொல்லும் நடிகர் யார்?
பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் தான் நடித்த படத்தை தனது சொந்த பணத்தை செலவிட்டு திரையரங்கில் ஓட வைத்ததாக இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராம் கோபால் வர்மா
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா சமீப காலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற ஜெய் ஹோ பாடலை ரஹ்மான் இசையமைக்கவில்லை சுக்விந்தர் சிங் அந்த பாடலை இசையமைத்தார் என்று அவர் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாடகர் சுக்விந்தர் சிங் அந்தப் பாடலை ரஹ்மான் தான் இசையமைத்தார் என்று விளக்கமளித்தார். சமீபத்திய தனியார் ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம் கோபால் வர்மா இதேபோல் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி எதிர்ப்புகளுக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி படத்தை அவர் பாராட்டி பேசியுள்ள நெட்டிசன்களிடம் இருந்து எதிர் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இது தவிர்த்து பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரைப் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பேசுபொருளாகி உள்ளது.
சொந்த பணத்தை செலவு செய்து படத்தை ஓடவைத்தார்
நிகழ்ச்சியில் பேசிய ராம் கோபால் வர்மா “ பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்த படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ஓடவில்லை. இதனால் சில நாட்களில் படத்தை திரையரங்கில் இருந்து நீக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இது அந்த நடிகருக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் கருதியதால் அந்த நடிகர் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி படத்தை இன்னும் சில நாட்கள் திரையரங்கில் ஓட வைக்க சொல்லியிருக்கிறார். இதற்கு தனது சொந்த பணத்தை அவர் செலவு செய்தார். ஆனால் விநியோகஸ்தர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படாததால் அவர்கள் படத்திற்கு விளம்பரங்கள் கொடுக்கவில்லை. படம் மட்டும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தது” என்று ராம் கோபால் வர்மா தெரிவித்தார்.
Ram Gopal Varma about #Prabhas movies self bookings collection.
— Raja (@raja_324) August 4, 2024
He charged 100-200cr per film & total money he invested to himself for buying his own movie tickets.
Such a Shame for this 🤡.pic.twitter.com/qzdyTYnByx
யார் அந்த தெலுங்கு நடிகர்
ராம் கோபால் வர்மா குறிப்பிட்ட அந்த தெலுங்கு நடிகர் யார் என்று தற்போது சமூக வலைதளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது. சில அது நடிகர் ராம் சரண் என்று கூறிவருகிறார்கள். சிலர் நடிகர் பிரபாஸ் என்றும் சிலர் மகேஷ் பாபு என்றும் கூறி வருகிறார்கள். ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்து தெலுங்கு திரையுலகின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.