‛அண்ணே ஓகே சொன்னதால தான் படத்துல அந்த சீன்...’ - நாம் தமிழர் விளக்கம்!
குறிப்பாக சூர்யா ஒரு தெலுங்கர் அதனால்தான் அவர் தயாரிக்கும் படத்தில் சீமானை கேளிக்குள்ளாக்கியுள்ளார் என காட்டமாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் `இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’ . இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்க்ய் சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட் ‘ தயாரித்துள்ளது. படத்தில் மிதுன் மாணிக்கம் மற்றும் நம்யா பாண்டியன் நடித்துள்ளனர். கிராமம் , விவசாயம், காளை மாடுகள், அப்பாவி கதாநாயகன், வெகுளியான கிராம மக்கள் என வழக்கமனா கிராமத்து கதையை கையில் எடுத்து, வித்தியாசமான முறையில் படமாக்க முயற்சித்துள்ளார் இயக்குநர். இந்த படத்தின் பல இடங்களில் அரசியல் வசனங்களை புகுத்தியுள்ளார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை போன்று ஒருவரை சித்தரித்துள்ளார். அந்த கதாபாத்திரம் சீமானின் , வாய்மொழி மற்றும் உடல்மொழியையும் அப்படியே இமிடேட் செய்துள்ளது. ‘வாய்ப்பில்லை ராஜா’, தன்மானம் ,இனமானம் போன்ற சீமானின் வைரல் வீடியோ வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் பலரும் சீமானை இயக்குநர் நக்கல் செய்துள்ளதாக தகவலை பரப்ப தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக சூர்யா ஒரு தெலுங்கர் அதனால்தான் அவர் தயாரிக்கும் படத்தில் சீமானை கேளிக்குள்ளாக்கியுள்ளார் என காட்டமாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக் ட்விட்டரில் இது குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் “படத்தின் இயக்குநர், அண்ணன் சீமான் அவர்களிடம் காட்சியைக் காண்பித்து ஒப்புதல் பெற்றப் பிறகே, திரைப்படத்தில் சேர்த்தார்.” என குறிப்பிட்டுள்ளார்.இந்தியா முழுவதும் தேர்தல் அரசியல்வாதிகள் மீது எளிய மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை மையப்படுத்தி, அதனைக் கேலி செய்யும் படமாக உருவாகியிருக்கிறது `இராமே ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும்’. எனினும், அதனை எந்தத் தரப்பிலும் நின்று செய்யாமல், அனைத்து அரசியல்வாதிகளும் கெட்டவர்கள், எதுவும் தெரியாதவர்கள் என்ற ரீதியிலான சித்தரிப்பு, மேல்தட்டுப் பொதுப் புத்தியின் பார்வையில் இருந்து தோன்றியதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் செல்லாத நோட்டுக்காக ஏமாறும் குஜராத் சேட்டு, ஆடி காரில் வந்து இறங்கி விவசாயி கெட்டப்
பிறகு மாறும் `விவசாயி’ (அய்யாக்கண்ணு ரெஃபரன்ஸ்), சீமான், ஸ்டாலின் போன்றோரின் ரெபரன்ஸ் எனப் பல இடங்களில் ரியல் அரசியலைப் பகடி செய்வதாக நினைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசம், பீகார் முதலான மாநிலங்களின் நிலம், அரசியலோடு தொடர்புபடுத்தியிருக்கிறது இந்தப் படம். அதனாலேயே யதார்த்தமான திரைப்படமாக இல்லாமல் சறுக்கிறது. இறுதிக் காட்சியில், கேரளாவுக்கு ஏற்றிச் செல்லப்படும் மாடுகள், மாட்டுக்கறி கடை என கொதிப்பான அரசியல் நிறைந்த விவகாரத்தையும் தொட்டுச் சென்றிருப்பதன் மூலம், அரசியல் நிலைப்பாடு இயல்பாகவே இந்தப் படத்தில் உருவாகிறது. அமேசான் பிரைமில் நேற்று (செப்டம்பர் 24) வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.