Nayanthara: அடேங்கப்பா... ஜவான் படத்தில் நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடிகளா... வாயைப் பிளக்கும் கோலிவுட் வட்டாரம்!
'ஜவான்' படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகி திரைத்துறையினரை வாய் பிளக்க வைத்துள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார், கோலிவுட் குயின் என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது திரைப்பயணத்தை தொடங்கிய நாள் முதல் இன்று வரை அவரின் பயணம் பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. ரசிகர்களுடன் அவருக்கு இருக்கும் கனெக்ட் தான் அதற்கு முக்கியமான காரணம்.
பிரமாண்டமான ஆடியோ லான்ச் :
பாலிவுட் கிங் கான் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார். அட்லீ இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ராக் ஸ்டார் அனிருத் இசையில் இப்படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
அட்லீயின் பிரமாண்ட திட்டம் :
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அட்லீ. 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றியை கொடுத்து ரசிகர்களின் கவனம் பெற்றார். அடுத்து நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. அதைத் தொடர்ந்து அடுத்த பிரமாண்டமான ப்ராஜெக்ட்டாக ஜவான் உருவாகியுள்ளது. இப்படம் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். நடிகர் ஷாருக்கானை வைத்து இப்படத்தை எடுக்க வேண்டுமென அவருக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்து உருவாக்கியுள்ளார்.
வெயிட்டேஜ் அதிகம் :
ஜவான் படத்தில் ஹீரோயினான நயன்தாராவுக்கு மிகவும் வெயிட்டேஜ் உள்ள கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரில் நயன்தாராவின் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.
நயன் சம்பளம் என்ன ?
இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாரா இப்படத்திற்காக 11 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அவரின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை என்ற பேச்சுக்கள் அடிபட்டன. நயனின் திறமைக்கும் டெடிகேஷனுக்கும் கொடுக்கப்படும் மதிப்பு தான் சம்பளமாக பிரதிபலிக்கிறது எனக் கூறப்படுகிறது.
ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தால் நயனின் சம்பளம் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதே போல ஜவான் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு 20 கோடிகளும் இசையமைப்பாளர் அனிருத்துக்கு 8 கோடி ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகா படுகோன் 15 - 20 கோடி வரை சம்பளமாகப் பெற்றுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 1000 கோடியை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பாக்கப்படுகிறது.