Vijayakanth Health Condition: விஜயகாந்த் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? ஏபிபி நாடுக்கு மருத்துவமனை அளித்த பிரத்யேக தகவல்
விஜயகாந்தின் தற்போதைய உடநிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த பிரத்யேக தகவலை பார்க்கலாம்.
தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், கடந்த 18- ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், சமீபத்தில் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்திப்பு:
விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புவதாகவும், மியாட் மருத்துவமனை தெரிவித்தது. இதனை அடுத்து தொண்டர்கள், விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.
தற்போதைய நிலவரம் என்ன?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நல பிரச்சினைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை கூட தவிர்த்து வருகிறார். விஜயகாந்த் தனது பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட நாட்களில் தொண்டர்களை சந்திப்பார். சமீபத்திய சந்திப்பின் போது தொண்டர்களை பார்த்து கை அசைத்தார் விஜயகாந்த். அண்மையில் அவரின் உடல்நிலை சீராக இல்லை என வெளியான செய்தியாள் தொண்டர்கள் அப்சட்டில் உள்ளனர். இருந்த போதிலும் விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று வருவார் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க
Bigg Boss 7 Tamil: ட்விஸ்டா இருக்கே! இந்த வாரம் பிக்பாஸில் இருந்து நடையை கட்டும் போட்டியாளர் இவரா?