மேலும் அறிய

TN Rain Alert: 4,5ம் தேதிகளில் மக்கள் வெளியில் வரக்கூடாதா? உண்மை என்ன? ஏபிபி நாடுக்கு வானிலை இயக்குனர் பிரத்யேக பேட்டி

வங்கக்கடலில் உருவாகும் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 3,4 ஆம் தேதிகளில் சென்னையில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் புயல் காரணமாக சென்னை மக்கள் வெளியே வர வேண்டாம் என பரவும் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், " தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றுக்கு தாழ்வு மண்டலமாக  இன்று காலை 8:30 மணி அளவில் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 450 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு அருகே சுமார் 670 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

 இது தொடர்ந்து மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து 4ஆம் தேதி பிற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டியுள்ள வட தமிழக கடல் பகுதியில் நிலை கொள்ளும். அதன் பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5 ஆம் தேதி முற்பகலில் புயலாக கரையை கடக்கக்கூடும்.

அடுத்த 3 தினங்கள்:

 வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில் அடுத்து வரும் 3 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் ஓரிடங்களில் கன மழை பெய்யக்கூடும்.  3ஆம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும்.  வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடலுக்குச் செல்ல வேண்டாம்:

 டிசம்பர் 4ஆம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 4 தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடலூர் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

 மேலும் விழுப்புரம், புதுவை, கடலூர் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கடலின்  நிலையை பொறுத்தவரையில் டிசம்பர் 2,3, 4  ஆகிய தேதிகளில்  தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக கடலோரப் பகுதியில் ஆந்திர கடற்கரை பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் அப்பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1 முதல் இன்று வரையுள்ள காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 34 செ.மீ இந்த காலகட்டத்தில் சராசரி அளவு 36 செ.மீ. இது இயல்பை விட 7 சதவீதம் குறைவாகும். சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில்  வடகிழக்கு பருவமழை காலத்தில் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 62 செ.மீ இந்த காலகட்டத்தில் சராசரி அளவு 67 செ.மீ ஆகும், இது இயல்பை விட 7 சதவீதம் குறைவு” என தெரிவித்துள்ளார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்:

மேலும் புயல் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் மக்கள் வெளியே வருவது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரனை தொடர்பு கொண்ட போது, வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் வெளியே வரக்கூடாது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகளை நான் மதிப்பது இல்லை: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
TN Rain: விழுப்புரம் மக்களுக்கு ஆறுதல் செய்தி.! வலுவிழந்த புயல்:அடுத்து எங்கு கனமழை?
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
களத்தில் இந்திய ராணுவம்.. புதுச்சேரியில் 2 மணி நேரத்தில் 100 பேர் மீட்பு!
சென்னை டூ புதுச்சேரி.. 2 மணி நேரத்தில் களத்திற்கு சென்ற ராணுவம்.. புயலால் பாதிக்கப்பட்ட 100 பேர் மீட்பு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Puducherry Leave:புதுச்சேரியில் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.! அங்கு நிலைமை எப்படி?
Embed widget