மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: ட்விஸ்டா இருக்கே! இந்த வாரம் பிக்பாஸில் இருந்து நடையை கட்டும் போட்டியாளர் இவரா?

பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் 7 தமிழ்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது.   இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, தினேஷ், அனன்யா, பூர்ணிமா, விக்ரம், ஜோவிகா, கூல் சுரேஷ் என எட்டு பேர் உள்ளனர். அதேபோல, இந்த வார கேப்டனாக நிக்சன் இருந்து வருகிறார். 

நிக்சனின் கேப்டன்சி வாரத்தில் பெரிய அளவில் பஞ்சாயத்துக்கள் எதுவுமின்றி சென்று கொண்டிருந்த  பிக்பாஸ் வீட்டில், கடந்த இரண்டு நாட்களாக அனல் பறக்கிறது. காரணம் விஷ்ணு - அர்ச்சனா இடையிலான வாக்குவாதம் தான். வார இறுதியில் கமல்ஹாசன் பேசுவதற்கு கண்டென்ட்டே இல்லாமல் இருந்த நிலையில், கடைசி இரண்டு நாளில் இருவரும் கன்டென்ட்டை வாரி வழங்கினர். அதாவது, ஸ்மால் பாஸ் வீடே இரண்டாகும் அளவுக்கு இருவரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். சுற்றி நின்ற யாரும் பேச்சுக்கு கூட இருவரையும் தடுக்க வரவில்லை. இப்படியே கடந்த இரண்டு நாட்களும் சென்றுக் கொண்டிருந்தது. அதேபோல, டாஸ்க் ஒன்றில், வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் பிக்பாஸ் டீமை குறைகூறிய நிக்சனுக்கு வித்தியாசமான டாஸ்க்குளும் வழங்கப்பட்டன. 

இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

இதற்கிடையில், இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் விக்ரம் மற்றும் ஜோவிகா பெயர்கள் இணையத்தில் அடிப்பட்டு வருகிறது. அதாவது, குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளராக இருந்து வருகின்றனர்.  குறிப்பாக விக்ரமை விட ஜோவிகா தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விக்ரம் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்கள், விமர்சனங்கள் இருந்தாலும், அவர் யாருடன் சேர்ந்து கேம் ஆடவில்லை என்றும் யாரையும் மரியாதை குறைவாக நடத்தவில்லை என்றும் ரசிகர்கள்  பாசிட்டிவாக கூறி வருகின்றனர். 

ஆனால், ஜோவிகா மீது ஆரம்பத்தில் இருந்து  பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். அவர் சரியாக கேம் விளையாடவில்லை என்றும் எதற்கும் குரல் கொடுக்கவில்லை என்றும் பல விமர்சனங்கள வருகின்றன.  மேலும், முதல் இரண்டு வாரங்கள் ஜோவிகா தணித்து விளையாடியதாகவும், பின்பு மாயா டீமில் இணைந்து சரியாக விளையாடவில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  எனவே, ஜோவிகா இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சீசனில் ரசிகர்கள்  எதிர்பார்ப்பை மீறி பல விஷயங்கள் நடந்து வருவதால் உறுதியாக ஒரு விஷியத்தை யூகித்து கூற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
த்ரிஷா வீட்டில் இருந்து முதல்ல வெளிய வரனும்.. விஜய்யை அட்டாக் செய்த நயினார் நாகேந்திரன்!
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
7 சீட்டர்.. குடும்பத்தோடு போக Citroen Aircross X காரை வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
7 சீட்டர்.. குடும்பத்தோடு போக Citroen Aircross X காரை வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
வெளியான செம அறிவிப்பு; பிறப்பு முதல் கல்லூரி வரை அரசே ரூ.1 லட்சம் நிதியுதவி- லட்சாதிபதி மகள் திட்டம்!
வெளியான செம அறிவிப்பு; பிறப்பு முதல் கல்லூரி வரை அரசே ரூ.1 லட்சம் நிதியுதவி- லட்சாதிபதி மகள் திட்டம்!
சிவகங்கை இளைஞர்களே.. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: கடைசி தேதிக்கு முன் உடனே விண்ணப்பியுங்கள்!
சிவகங்கை இளைஞர்களே.. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை: கடைசி தேதிக்கு முன் உடனே விண்ணப்பியுங்கள்!
Embed widget