Raayan: ஒரு வார்த்தையில் ராயன் படம்...ஏ.பி.பி நாடு நடத்திய கருத்துக்கேட்பு முடிவுகள்
தனுஷின் ராயன் படம் சூப்பரா ? சுமாரா ? ஒருமுறை பார்க்கலாமா ? ஏ.பி.பி நாடு நடத்திய எக்ஸ் கருத்துக் கேட்பில் ரசிகர்களிம் முடிவுகளைப் பார்க்கலாம்
ராயன்
தனுஷின் 50வது படமாக உருவாகி இருக்கும் ராயன் (Raayan) படம் இன்று ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ் , துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி , வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ் , தெலுங்கு , மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள ராயன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏபிபி நாடு எக்ஸ் தளத்தில் நடத்திய கருத்துக் கேட்பில் ராயன் படத்திற்கு ரசிகர்கள் வழங்கியிருக்கும் விமர்சனம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ராயன் கதை
காத்தவராயன் (தனுஷ்) முத்துவேல் ராயன் ( சந்தீப் கிஷன்) மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) ஆகிய மூவரும் சகோதரர்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா ( துஷாரா விஜயன்) . சின்ன வயதில் தங்கள் பெற்றோர்களால் கைவிடப்படும் இவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வருகிறார்கள். மூத்தவரான காத்தவராயன் ( தனுஷ்) தன் தம்பி தங்கச்சியின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர்.
மறுபக்கம் சென்னையின் பிரபல ரவுடியின் மகன் சேது ( எஸ்.ஜே சூர்யா) தனது தந்தையைக் கொன்ற துரையை (சரவணன்) எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் எப்படியாவது மோதலை ஏற்படுத்தி அவர்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார் போலீஸாக வரும் பிரகாஷ் ராஜ். இந்த கொலைகார கும்பலிடம் இருந்து ராயன் தனது குடும்பத்தை காப்பாறினாரா. ஒருவேளை ராயன் உயிருக்குயிராக நினைக்கும் அவன் தம்பிகள் அவனுக்கே எதிராக திரும்பினால்? ஆக்ஷன் எமோஷன் என தொடர்கிறது ராயன் படத்தின் கதை...
தனுஷ் நடித்து இயக்கி வெளியான ராயன் திரைப்படம் எப்படி இருக்கு? #Rayaan #Dhanush50 #Dhanush #Cinema #selvaraghavan #SJSuryah
— ABP Nadu (@abpnadu) July 26, 2024
சூப்பர்
ராயன் படம் சூப்பர் என்று 52.1 சதவீதம் ரசிகர்கள் வாக்களித்துள்ளார்கள்.
ஒருமுறைப் பார்க்கலாம்
18.4 சதவீதம் ரசிகர்கள் ராயன் படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்கிற கருத்திற்கு வாக்களித்துள்ளார்கள்
நல்லா இல்லை
13.5 சதவீதம் ரசிகர்கள் படம் நன்றாக இல்லை என்கிற கருத்திற்கு வாக்களித்துள்ளார்கள்
கருத்து தெரிவிக்க விருப்பமில்லை
16 சதவீதம் ரசிகர்கள் படம் குறித்து கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்கள்.
இந்த முடிவுகள் எக்ஸ் தளத்தில் பதிவான தகவல்களின் அடிப்படையிலானவை. மேலும் இந்த முடிவுகள் ஜூலை 26 காலை முதல் மாலை வரையிலான முடிவுகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை அப்டேட் செய்யப் படும்.
மேலும் படிக்க : Raayan Review: ராவண அவதாரம் எடுக்கும் ராயன்! - எப்படி இருக்கு தனுஷின் அரைசதம்! முழு விமர்சனம் இங்கே!