மேலும் அறிய

Singer Vani Jayaram Death: வாணி ஜெயராம் மரணம்.. நடந்தது என்ன? - பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு பின்னணி!

பாடகி வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகவும், அவர் எந்தவித சிகிச்சையும் எடுத்து வரவில்லை என அவரது  வீட்டு பணிப்பெண் மலர்கொடி தெரிவித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே வாணி ஜெயராம் வீட்டு பணிப்பெண் மலர்கொடி செய்தியாளர்களிடம், இன்று காலை என்ன நடந்தது என்ற தகவலை தெரிவித்துள்ளார். அதில் “வாணி ஜெயராம் அவரது வீட்டில் தனியாகத் தான் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக வீட்டில் எல்லா வேலையும் நான் தான் செய்வேன். வழக்கம்போல இன்றைக்கு காலை 10.45 மணிக்கு நான் வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடித்தேன். கிட்டதட்ட 5 முறை அடித்தும் அவர் திறக்கவில்லை. உடனே போன் செய்து பார்த்தேன். அழைப்பை எடுக்கவில்லை. என் கணவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன்.

அவரும் வாணி ஜெயராமிற்கு போன் செய்து பார்த்தபோதும் அழைப்பை எடுக்கவில்லை, கதவும் திறக்கப்படவில்லை என்பதால் சந்தேகமடைந்து கீழ் வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை சொன்னேன். பின்னர் அனைவரும் சேர்ந்து போலீசுக்கு தகவல் சொன்னோம். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார்.  பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்த வண்ணமே இருந்தது. அவர் எந்த சிகிச்சையும் எடுத்து வரவில்லை. தற்போது நெற்றியில் காயம் இருக்கிறது” என மலர்கொடி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
Embed widget