HBD S.P.Balasubramaniam : "பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு.." : பாடும் நிலாவின் பிறந்தநாள்.. உருகும் ரசிகர்கள்..
அவரது வசீகரிக்கும் குரலை தாண்டி அவர் ஒரு அதிர்ஷ்டக்கார பாடகர் என ஸ்டார்ஸ் கொண்டினார்கள்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பங்களிப்பை கொடுத்தவர் மறைந்த பாடகர் எஸ்.பி.பால்சுப்பிரமணியன். 1966 ஆம் ஆண்டு தனது சினிமாவில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பி-யின் பாடல்கள் இன்றைக்கு தேனமுதாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
அவரை போற்றி, அவர் மீதான அன்பை, பறைசாற்றி இசை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்..
இன்று எஸ்.பி. பி அவர்களின் பிறந்தநாள்.அவரைப்பற்றி பலரும் அறியாத சுவாரஸ்யங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொறியாளர் கனவு :
SP பாலசுப்ரமணியம் பாடலில் மட்டுமல்ல படிப்பிலும் சகலகலா வல்லவர்தான். தனது பொறியியல் படிப்பை தொடர அனந்தபூரில் JNTU கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் சில காரணங்களால் அவரலால் தனது கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. ல்லூரி படிப்பை விட்டு விலகினார். அதே நேரத்தில், சென்னை இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்து, பல இசைப் போட்டிகளில் பங்கேற்றார்.அங்குதான் எஸ்.பி.கோதண்டபாணியை சந்தித்தார் . எஸ்.பி.கோதண்டபாணி எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் வழிகாட்டியாகவும், குருவாகவும் மாறினார்.
லக்கி ஷார்ம் :
எஸ்.பி.பி பல சூப்பர் ஸ்டார்களுக்கு intro பாடல்களை பாடியுள்ளார். அவரது வசீகரிக்கும் குரைலை தாண்டி அவர் ஒரு அதிர்ஷ்டக்கார பாடகர் என ஸ்டார்ஸ் கொண்டினார்கள்.
கின்னஸ் சாதனை :
தனது வாழ்நாளில் அதிக பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 பாடல்கள் வீதம் ஆண்டுக்கு சராசரியாக 930 பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இதுவரையில் 40,000+ பாடல்களைப் பாடியுள்ளார், இது உலகின் எந்தப் பாடகரிலும் முறியடிக்க முடியாத சாதனையாகும்.
திறமையான நடிகர் :
எஸ்.பி.பி பாடுவதில் எந்த அளவிற்கு திறமையானவரோ . அதே அளவிற்கு நடிப்பிலும். தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் சரளமாகப் பேசும் இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். துணை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 72 படங்ககளில் எஸ்.பி.பி நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர்:
இத்தனை பாடல்களை நேர்த்தியாகவும் வசீகரத்துடனும் பாடிய எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 46 படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 மணி நேரத்தில் 21 பாடல்கள்:
ஒரு நாளில் அதிக பாடலை பாடியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் எஸ்.பி.பி. திறமையான பாடகர் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 12 மணி நேரத்தில் 21 பாடல்களை பதிவு செய்துள்ளார். அதோடு ஒரு நாளில் 19 தமிழ் பாடல்களையும், இந்தியில் ஒரு நாளில் 16 பாடல்களையும் பதிவு செய்துள்ளார். 'கேளடி கண்மணி' படத்துக்காக 'மண்ணில் இந்தா' பாடலில் மூச்சு விடாமல் பாடியிருந்தார் என்பது நாம் அறிந்ததே!
6 தேசிய விருதுகள்:
எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆறு தேசிய விருதுகளை வென்ற அரிய பாடகர்களில் ஒருவர்.தெலுங்கில் மூன்று முறையும், தமிழ், ஹிந்தி, கன்னடம் என தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். தமிழில், 'மின்சார கனவு' படத்தில் 'தங்க தாமரை' பாடலை சிறப்பாக பாடியதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் தேசிய விருது பெற்றார்.