மேலும் அறிய

HBD Murali: முரளி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்! உங்களுக்கு தெரியுமா?

தமிழ் திரையுலகில் ஏராளமான காதல் மற்றும் குடும்ப படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள மறைந்த நடிகர் முரளியின் 60வது பிறந்தநாள் இன்று.

தமிழ் திரையுலகில் கதாநாயகன் என்ற பிம்பத்தை உடைத்து எறிந்த பட்டிதொட்டியங்கும் சென்று சேர்ந்த நடிகர்களில் தவிர்க்க முடியாதவர் முரளி. இவர் காலமானாலும் இவர் நடித்த படங்கள், இவரது காலத்தால் அழியாத பாடல்கள் மூலமாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். இவருக்கு இன்று 60 வயது ஆகிறது.

முரளி படத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்:

ப்ரேம பர்வா என்ற கன்னட படம் மூலமாக முதன்முதலில் நாயகனாக அறிமுகமான நடிகர் முரளி தமிழில் முதன்முதலில் அவர் நடித்த கன்னட படத்தின் ரீமேக்காக பூவிலங்கு படத்தில் நடித்தார். இளையராஜா இசையில் வெளியான அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க, அடுத்தடுத்து நல்ல கதை தேர்வுகள் மூலமாக அடுத்தடுத்து ஹிட் படங்களை அடுத்து மக்கள் மனதில் தவிர்க்க முடியாத நாயகனாக அவதாரம் எடுத்தார். புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் தமிழில் முதன்முதலில் இயக்கிய பகல்நிலவு படத்தின் நாயகன் முரளி.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பலவற்றிற்கும், திரையுலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோரும் அவர்களது கட்சியுமே அதற்கு உதாரணம். ஆனால், பா.ம.க.விற்கும் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு ஏதும் இருந்தது கிடையாது. ஆனால், அந்த பா.ம.க.வின் நிறுவனரான ராமதாஸ் முரளி நடித்த படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

தொண்டன்:

1995ம் ஆண்டு நடந்த தொண்டன் என்ற படத்தில் முரளி நாயகனாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் புரட்சிகரமா ஆட்டோ ஓட்டுநராக நடித்திருப்பார். இந்த படத்தில் கட்டாய கல்விக்காக போராடும் ஒரு மருத்துவராக ராமதாஸ் கவுரவ தோற்றத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் கட்டாய கல்வி கோரி வழக்கு தொடர்பவராக வந்து, கட்டாய கல்வி குறித்து மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது போல காட்சி இந்த படத்தில் இடம்பிடித்திருக்கும்.

நடிகர் முரளி நடிப்பில் ராமதாஸ் கவுரவ தோற்றத்தில் நடித்த இந்த படத்தை கார்வண்ணன் இயக்கியுள்ளார். ராஜன் சர்மா இசையமைத்துள்ள இந்த படத்தை ஆர்.கே.பிலிம் மேக்கர்ஸ் சர்க்யூட் தயாரித்துள்ளது. ரோகிணி நாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். இன்று பிறந்த நாள் காணும் மறைந்த நடிகர் முரளி இதே தொண்டன் படத்தில் இடம்பெற்றுள்ள நட்டநடு சென்டரு என்ற பாடலையும் பாடியுள்ளார். இவர் கடைசியாக தனது மகன் அதர்வா நாயகனாக அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் நடித்திருந்தார். கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தூக்கத்திலே மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
ஜெயிலர் 2 நல்லா போகுது..சீன் படம் திரையிட முடியாது..திரையரங்கம் அதிரடி அறிவிப்பு
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
காலியாக கிடக்கும் 6 மணிக் காட்சிகள்..சூடு பிடிக்குமா சூர்யாவின் சீன் பட முன்பதிவு?
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
ஆந்திரா பள்ளி மாணவி தாக்குதலுக்கு என் படம் காரணமா...கடும் பதிலடி கொடுத்த சந்தீப் ரெட்டி வங்கா
Karthigai Deepam: சந்தேகப்படும் கார்த்திக்.. ஏக்கப்படும் சுவாதி.. வருத்தப்படும் பரமேஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்தேகப்படும் கார்த்திக்.. ஏக்கப்படும் சுவாதி.. வருத்தப்படும் பரமேஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
Diwali Special Bus: ஊருக்கு போக ரெடியா! தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு என்ன?
பவர் Play : ‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
‘சுற்றுலாத்துறையை மொட்டை அடித்த அதிகாரிகள்’ நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு..?
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக ஆளுநராக கருப்பின பெண் தேர்வு - ட்ரம்புக்கு அதிர்ச்சியளித்த தேர்தல் முடிவுகள்!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Embed widget