Jawan OTT Release: ஜவான் படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி.. ரிலீஸ் செய்யப்போவது யாரு..?
திரையரங்கு மட்டும் இல்லாமல் ஓடிடியிலும் ஜவான் வெளியாவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜவான் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜவான்:
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, சஞ்சய் தத், யோகிபாபு என பலரும் நடித்துள்ள ஜவான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் இந்தியில் இயக்குநராக அட்லீ அறிமுகமாகியுள்ளார். பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஏற்கெனவே ரிலீசுக்கு முன்பாக வெளியான ஜவான் படத்தின் பாடல்களும், கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டானது. ஜவான் படத்தின் ரிலீசை பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். திரைபிரபலங்களும் ஜவான் படத்திற்கு உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
ஓடிடி உரிமம் யாருக்கு?
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ஜவான் படம் ரிலீசாகி உள்ளதால் வசூலில் சாதனை படைக்கும் என கணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திரையரங்கு மட்டும் இல்லாமல் ஓடிடியிலும் ஜவான் வெளியாவது குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. திரையரங்கிற்கு போட்டியாக ஓடிடியில் ரிலீசாகும் படங்களும் விமர்சனத்திலும், வசூலிலும் சாதனை படைத்து வருவதால் ஓடிடி ரிலீஸும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், தமிழ் தொலைக்காட்சியின் உரிமத்தை ஜீ தமிழ் சேனலும் பெற்றுள்ளது. இதேபோன்று அனுஷ்கா நடிப்பில் இன்று ரிலீசாகியுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனமும், தமிழ் தொலைக்காட்சியின் உரிமத்தை ஜீ தமிழ் சேனலும் பெற்றுள்ளது.
View this post on Instagram
2 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு அனுஷா ஷெட்டியின் நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வெளியாகி உள்ளது. 2020ம் ஆண்டு வெளியான நிசப்தம் படத்துக்கு பிறகு அனுஷ்கா எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் நவீன் பொலிஷெட்டி, முரளி சர்மா, நாசர், துளசி என பலர் நடித்துள்ள இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகி உள்ளது. படத்தில் சமையல் கலைஞராக அனுஷ்கா நடித்துள்ளார்.
மேலும் படிக்க: Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!
Leo Update : லியோவின் அடுத்த அப்டேட் குறித்த ஹிண்டை கொடுத்த அனிருத்..!