Good Bad Ugly Collection: வசூல் அள்ளுதே.! குட் பேட் அக்லி-க்கு கிடைத்த குட் ரெஸ்பான்ஸ்... 2 நாட்களில் எத்தனை கோடி.?
அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம், வசூலிலும் கலக்கி வருகிறது. முதல் நாளில் 30 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், 2-வது நாளில் எத்தனை கோடிகளை அள்ளியது தெரியுமா.?

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துவரும் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10-ம் தேதி வெளியானது. ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம், முதல் நாளிலேயே 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில், 2-வது நாளில் அதைவிட அதிக அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது எவ்வளவு என்று பார்க்கலாம்.
ரசிகர்களை கவர்ந்த அஜித்தின் ‘குட் பேட் அக்லி‘
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதிலும், 1000-த்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, அஜித் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு விருந்தாகவே அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
த்ரிஷா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில், அர்ஜுன் தாஸ், சுனில், பிரபு, பிரசன்னா, யோகி பாபு, சிம்ரன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ட்ரெய்லரை பார்த்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் வசூலில் கலக்கி வருகிறது. படம் வெளியான முதல் நாளில் 30.9 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
2-வது நாளில் கல்லா கட்டிய ‘குட் பேட் அக்லி‘
இந்த நிலையில், தொடரும் ரசிகர்களின் பேராதரவுடன், 2-வது நாளில், அதாவது நேற்று இந்த திரைப்படம், உலகளவில் 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வியாழன், வெள்ளிக்கிழமைகளிலேயே இந்த வசூல் என்றால், வார இறுதி நாட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மேலும், வரும் திங்கட் கிழமையும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை என்பதால், குட் பேட் அக்லி சிறப்பாக கல்லா கட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

