Good Bad Ugly Boxoffice: தி கோட் படத்தை மிஞ்சியதா? அஜித்தின் குட் பேட் அக்லி - முதல் நாளில் மொத்த வசூல் எத்தனை கோடிகள்?
Good Bad Ugly day 1 collection: அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Good Bad Ugly day 1 collection: அஜித்குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தின், உலகளாவிய முதல் நாள் வசூல் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி:
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. பிரபு,த்ரிஷா, பிரசன்னா மற்றும் அர்ஜுன் தாஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
கதைக்களம்:
டான்களுக்கு எல்லாம் டான் ஆன ஏகே, தனத் மனைவி மற்றும் மகனுக்காக அனைத்து குற்றச்செயல்களையும் விட்டுவிட்டு சிறைக்கு செல்கிறார். இனி ரவுடி தொழிலில் ஈடுபடபோவதில்லை எனவும் உறுதி எடுக்கிறார். ஆனால், தனது மகனுக்கு ஏற்படும் ஆபத்தால் மீண்டும் ரவுடியாக களமிறங்கும் ஏகே, தனத் மகனை காப்பாற்றினாரா? பிறந்தது முதலே பிரிந்து இருக்கும் தனது மகனுடன் சேர்ந்தாரா? என்பதே குட் பேட் அக்லி படத்தின் கதை சுருக்கம்.
குட் பேட் அக்லி முதல் நாளிலேயே ரூ.50 கோடி வசூல்?
அஜித்தின் குட் பேட் அக்லி ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெடுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் முதல் நாளிலேயே ரூ.28.50 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் டிக்கெட் முன்பதிவு மூலமாக தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே 15 கோடி ரூபாய் ஈட்டியதாகவும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 3 கோடி ரூபாய் அளவிற்கு முன்பதிவு மூலம் வருவாய் ஈட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகை என்பது ஆன்லைனில் விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் அடிப்படையிலானத் மட்டுமே, இதுபோக பல திரையரங்குகளில் நேரடி டிக்கெட் விற்பனை இன்றும் தொடர்கிறது. அதன்படி, சுமார் 35 கோடி ரூபாய் வரையிலும் குட் பேட் அக்லி, இந்தியாவில் முதல் நாளிலேயே வசூலித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
அண்மையில் வெளியான அஜித்தின் துணிவு படம் முதல் நாளிலேயே 22 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் 17 முதல் 18 கோடியை மொத்த வசூலாக பதிவு செய்து இருக்கலாம் என தெரிகிறது. அதன்படி, முதல் நாளிலேயே கு பேட் அக்லி திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.50 கோடி வரை வசூல் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதேநேரம், திரையுலகில் அஜித்தின் போட்டியாளராக கருதப்படும், விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தி கோட். இப்படம் முதல் நாளிலேயே சர்வதேச அளவில் ரூ.126.32 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வசூல் அதிகரிக்குமா?
இன்று வழக்கமான வேலை நாள் என்பதால் படத்தின் வசூல் மந்தமாகவே இருக்க வாய்ப்புயுள்ளதாகவும், நாளை முதல் வார இறுதி தொடங்குவதால் குட் பேட் அக்லி படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் சினிமா துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. முந்தைய படத்தில் இல்லாத அளவிலான, ஆக்ஷன் உள்ளிட்ட கமர்சியல் அம்சங்கள் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி, அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி திருப்தியை வழங்கியுள்ளது. ஆனால், பொதுவான ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்குமா? என்பது வார இறுதியில் தெரிய வரும்.




















