’கேல் கீரை’ - ஆரோக்கியமான நன்மைகள்?
கேல் கீரையில் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ‘சூப்பர் ஃபுட்’ என்றழைக்கப்படுகிறது. கீரை வகைகளே ஆரோக்கியமிக்கவை.
இந்த கேல் கீரையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காலிஃப்ளாவர், கோஸ் ரகங்களை போல கேல் கீரை brassica oleracea வகையைச் சேர்ந்தது. பல வண்ணங்களில் கேல் கீரைகள் கிடைக்கும்.
க்ளோரோபில், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சீரற்ற ஹார்மோன் சுரப்பு, கொழுப்பு மேலாண்மையில் கேல் கீரை சிறந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கப் கேல் கீரையில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் அளவில் 5 கிராம் நார்ச்சத்து, 15 சதவீதம் கால்சியம், வைட்டமின் பி6, 40 சதவீதம் மக்னீசியம், 180 சதவீதம் வைட்டமின் ஏ, 200 சத வீதம் வைட்டமின் சி மற்றும் 1020 சதவீதம் வைட்டமின் கே ஆகியவை இருக்கிறதாம்.
வைட்டமின் ஈ, இரும்பு சத்து, துத்தநாகம், ஃபோலேட் ஆகியவையும் குறைந்த அளவில் இருக்கின்றன. இதில் உள்ள காரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை என்றும் இளமையாக இருக்க உதவுகிறது
இதில் கலோரி குறைவு என்பதால் கெட்ட கொழுப்பு சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
கேல் கீரையுடன் quinoa -சேர்த்து சாப்பிடுவது நல்லது. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு,
வெள்ளிக்காய், நறுக்கிய கேல் கீரை, சேர்த்து சாலட் செய்யதும். கேல் கீரையை எண்ணெயில் வதக்கி இதோடு சேர்த்துக்கொள்ளலாம்.