GOAT: மீண்டும் அதிகரிக்கப்போகும் கோட் வசூல்! திரையரங்கில் குவியப்போகும் ரசிகர்கள்! எப்படி?
தொடர் விடுமுறை தமிழ்நாட்டில் வருவதால் கோட் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று படக்குழு எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். உச்சநட்சத்திரமாக திகழும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் வெளியாகியுள்ள கோட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தொடர் விடுமுறை:
கடந்த 5ம் தேதி வெளியான இந்த படம் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக வசூலை வாரிக்குவித்தது. கடந்த திங்கள்கிழமை வரை மட்டுமே ரூபாய் 288 கோடி வரை வசூலை வாரிக்குவித்ததாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சுபமுகூர்த்த நாள், மிலாடி நபி என நாளை மறுநாள் முதல் வரும் செவ்வாய்கிழமை வரை தொடர் விடுமுறை வருகிறது. இடையில் திங்கள்கிழமை மட்டுமே வேலை நாள் ஆகும். இதனால், வெளியூர் செல்லும் பலரும் திங்கள்கிழமையும் விடுமுறை எடுத்துக்கொண்டு 4 நாட்கள் விடுமுறையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
படம் வெளியாகி ஏற்கனவே ஹவுஸ்புல் காட்சியாகவே பல திரையரங்கில் ஓடி வரும் நிலையில் மீண்டும் தொடர் விடுமுறை வருவதால் கோட் படத்திற்கு மீண்டும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெரிய படம் ஏதும் வெளியாகாத காரணத்தால் திரையரங்குகளில் பெரும்பாலும் கோட் படமே ஓடிக்கொண்டிருக்கிறது. சில திரையரங்கில் வாழை படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
மீண்டும் அதிகரிக்குமா கோட் வசூல்?
விஜய் நடிக்கும் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதாலும், பாசிட்டிவான விமர்சனம் என்பதாலும் குடும்பங்கள் கூட்டம் திரையரங்கில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மீண்டும் கோட் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று படக்குழுவும் நம்புகிறது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். மோகன் வில்லனாக நடித்துள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.