Ghilli Collection 2024: ஆல் ஏரியாவுலயும் ஐயா கில்லி! டைட்டானிக் வசூலை மிஞ்சிய கில்லி - விஜய் ரசிகர்கள் குஷி
Ghilli Re Release Collection: விஜய் நடிப்பில் ரீ ரிலீசாகியுள்ள கில்லி திரைப்படம் டைட்டானிக் படத்தின் வசூலை மிஞ்சி புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்த 2003ம் ஆண்டு நடித்து வெளியான திரைப்படம் கில்லி. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்த இந்த திரைப்படம் நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
வசூலை குவிக்கும் கில்லி:
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படங்களை ரீ ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வௌியான கில்லி படமும் கடந்த 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. நடிகர் விஜய் தற்போது த.வெ.க. கட்சியை தொடங்கிவிட்டதாலும், அவர் கோட் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க உள்ளதாக அறிவித்துவிட்டதாலும் இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும், மற்ற பெரிய படங்களும் ரிலீஸ் ஆகாத காரணத்தாலும், இது குடும்பங்கள் பார்த்து ரசிக்கும் படம் என்பதாலும் தொடர்ந்து ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், படத்தின் வசூல் புதியதாக ரிலீசான படங்களுக்கு நிகராக குவிந்து வருகிறது.
டைட்டானிக்கை மிஞ்சிய கில்லி:
படம் ரிலீசாகி இதுவரை 9 நாட்களில் ரூபாய் 20 கோடியை கடந்துள்ளது. இந்தியாவில் ரீ ரிலீசான படங்களிலே அதிகளவு வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை கில்லி படைத்துள்ளது. இதற்கு முன்பு இந்த சாதனையை 2012ம் ஆண்டு வெளியான டைட்டானிக் தன் வசம் வைத்திருந்தது.
கில்லி படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 18 கோடியே 40 லட்சமும், கர்நாடகாவில் ரூபாய் 1.20 கோடியும், இந்தியாவின் இதர பகுதியில் ரூபாய் 65 லட்சமும் வசூலித்துள்ளது. மொத்தம் இந்தியா முழுவதும் ரூபாய் 20 கோடியே 25 லட்சம் வசூலித்துள்ளது.
வெளிநாடுகளிலும் கலக்கல்:
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கில்லி வசூல் மழையை பொழிந்து வருகிறது. கனடாவில் 90 ஆயிரம் அமெரிக்க டாலரும், மலேசியாவில் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலரும், சிங்கப்பூரில் 75 ஆயிரம் அமெரிக்க டாலருயும், இலங்கையில் 60 ஆயிரம் அமெரிக்க டாலரும், ப்ரான்சில் 90 ஆயிரம் அமெரிக்க டாலரும், இங்கிலாந்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் டாலரும், ஐரோப்பாவின் இதர பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் டாலரும், உலகின் இதர பகுதிகளில் 1 லட்சம் அமெரிக்க டாலர் என வெளிநாடுகளில் மட்டும் 7 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 6 கோடியே 25 லட்சம் வசூல் செய்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தமாக கில்லி படம் ரூபாய் 26 கோடியே 50 லட்சம் வசூலை குவித்துள்ளது.
இந்தியாவிலே ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிகளவு வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ள கில்லி படத்தின் இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க: Mammootty: 72 வயது கேங்ஸ்டர் மம்மூட்டி: ஒரே ஃபோட்டோவால் கதிகலங்கிய இணையதளம்
மேலும் படிக்க: Ethirneechal serial: சாமியாராக மாறிய குணசேகரன்.. வீட்டை விட்டு வெளியேறும் குடும்பம்... எதிர்நீச்சலில் இன்று!