மேலும் அறிய
Advertisement
Ethirneechal serial: சாமியாராக மாறிய குணசேகரன்.. வீட்டை விட்டு வெளியேறும் குடும்பம்... எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal :வீட்டை விட்டு வெளியேறுவது என மனைவிகள் எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ளும் குணசேகரன் தம்பிகள். புதிய கெட்டப்பில் குணசேகரன் போட போகும் பிளான் என்ன? எதிர்நீச்சலில் இன்று.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் கடந்த எபிசோடில் சித்தார்த் - அஞ்சனா திருமணம் பேரதிர்ச்சியாக குணசேகரன் தலையில் இடியாக விழுந்தது. சித்தார்த்தும் முதல் முறையாக வாயை திறந்து உமையாளை எதிர்த்து பேசுகிறான். அனைவரும் குணசேகரனை அனாதையாக விட்டுவிட்டு அவரவர்களின் வேலையை பார்த்து செல்கிறார்கள்.
தர்ஷினியை மண்டபம் முழுக்க தேடுகிறாள் ஈஸ்வரி. ஆனால் தர்ஷினியோ தன்னுடைய பயணத்தை நோக்கி ஓடுகிறாள். அவளுக்கு ஆதரவாக ஜீவானந்தம் வந்து சேர்கிறார். ஈஸ்வரிக்கு போன் மூலம் தகவல் சொல்ல ஈஸ்வரி சந்தோஷப்படுகிறாள்.
அவமானத்தில் தனியாக இருக்கும் குணசேகரனிடம் சென்று அவர் செய்த ஆணாதிக்கம் இனிமேல் செல்லுபடி ஆகாது என்றும் இனிமேலாவது திருந்துங்க என பக்கம் பக்கமாக நான்கு மருமகள்களும் அவருக்கு அறிவுரை சொல்லிவிட்டு இனி உங்களால் எங்களின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என சவால் விட்டு செல்கிறார்கள். அத்துடன் கடந்த வார எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீட்டை விட்டு கிளம்பும் முடிவில் மருமகள் மூவரும் குணசேர்க்கன் வீட்டுக்கு வருகிறார்கள். கதிர், சக்தி, ஞானம், விசாலாட்சி அம்மா, ஈஸ்வரியின் அப்பா, நந்தினியின் அப்பா என அனைவருமே அங்கு இருக்கிறார்கள். வீட்டை விட்டு கிளம்ப போவதை பற்றி கூறியதும் ஷாக்கான நந்தினியின் அப்பா "வீட்டை விட்டு போறியா? என்னமா சொல்ற?" என கேட்கிறார். "
அவங்க மட்டும் இல்ல நாங்களும் அந்த முடிவை தான் எடுத்து இருக்கோம்" என நந்தினி சொல்கிறாள். அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் ஷாக்காகிறார்கள். "எங்க அம்மா எப்படி அவரை பெத்து வளர்த்தாங்களோ அதே போல தான் எங்களையும் பெத்து வளர்த்தாங்க. எங்களுக்கும் இங்க எல்லா சம உரிமையும் இருக்கு கேக்குறதுக்கு" என ஞானம் கொந்தளிக்க "இதே வார்த்தையை உங்க அம்மாவை சொல்ல சொல்லுங்க" என ரேணுகா சொல்ல விசாலாட்சி அம்மா என்ன பதில் சொல்வது என புரியாமல் முழிக்கிறார்.
வெள்ளை வேட்டையும் சட்டையுமாக இதுவரையில் இருந்த குணசேகரன் இப்போது காவி உடைக்கு மாறிவிட்டார். அனைவரும் கிளம்ப தயாராக இருக்கிறார்கள். "எல்லாரும் கிளம்ப தயாராகிட்டீங்களோ?" என குணசேகரன் கேட்க "ஆமா நாங்க ஒன்னும் உங்க அனுமதி வாங்கிட்டு போறதுக்காக காத்துக்கிடக்கல" என நக்கலாக பதில் சொல்கிறான். அதை கேட்டு குணசேகரன் முகமே மாறிவிடுகிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
இனி குணசேகரன் முடிவு என்ன? வீட்டில் இருந்து அனைவரும் கிளம்பலாம் பிளான் என்ன ஆக போகிறது. இனிவரும் எபிசோட்களில் கலர்கலரான ட்விஸ்ட் எதிர்நீச்சலில் (Ethirneechal) காத்திருக்கிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
சென்னை
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion