Silambarasan Manadu movie : சிம்புவின் மாநாடு படத்தின் புதிய அப்டேட்..
பொலிடிக்கல் ஆக்ஷன் திரில்லர் படமாக சிம்புவின் ’மாநாடு’ திரைப்படத்தின் முதல் சிங்கிள்ஸ் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது .
வெங்கட் பிரபு இயக்கத்தில் , யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன் நடிப்பில், ரிச்சர்ட் ஒளிப்பதிவில் வெளியாக இருக்கும் திரைப்படம் "மாநாடு” சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். கொரோனா காலகட்டம் என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாணி ப்ரியதர்ஷன் படத்தின் நாயகியாக நடிக்கிறார் . பிரேம்ஜி, எஸ்.ஜே சூர்யா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் .
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் ,படத்திற்கான பின்னணி வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது . தமிழில் வெளியாக இருக்கும் மாநாடு திரைப்படத்தை தெலுங்கு , கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்போவதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர் . படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 5 மில்லியன் வியூஸ்களைப் பெற்று ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது .
இந்நிலையில் , மாநாடு படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது. படத்தின் முதல் சிங்கிள்ஸ் வரும் ரம்ஜான் அன்று வெளியாக உள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ரசிகர்கள் இணையதளத்தில் இப்பொழுதே படத்தின் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர் .